நோக்கமும் குறிக்கோளும்
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தேசிய வாழ்வை வளப்படுத்திக் கொண்டும், அதன் சமயச்சார்பற்ற, ஜனநாயக அடித்தளங்களைப் பலப்படுத்திக் கொண்டும் உள்ள இந்திய முஸ்லிம்கள், பிற சிறுபான்மையினர் மற்றும் பிற்பட்ட வகுப்புகளின் மத, கலாச்சாரத் தனித்தன்மைகளை, அதற்குரிய தனிச்சிறப்போடும் கண்ணியத்தோடும் பேணிப் பாதுகாக்கவும் பாடுபடுவதுடன், குறிப்பாக,
- அ) இந்திய யூனியனாகிய தேசத்தின் சுதந்திரம், வாழ்வுரிமை, ஒற்றுமை,ஒருமைப்பாடு மற்றும் கௌரவம் ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும், நிர்வகிப்பதற்கும், மற்றும் நிலைநிறுத்தவும், பாதுகாக்கவும், நிர்வகிக்கவும் உறுதுணை புரிவதற்கும், இந்திய மக்களின் வளத்திற்கும், மகிழ்விற்கும், வலிமைப் படுத்த உழைக்கவும், பங்களிக்கவும்.
- ஆ) இந்திய சமுதாயத்தில் உள்ள முஸ்லிம்கள், மற்றும் செடியூல்டு சாதியினர், செடியூல்டு வகுப்பினர், பிற பிற்பட்ட மற்றும் நலிந்த பிரிவினர் உள்ளிட்ட சிறுபான்மையினரின் மதம், கலாச்சாரம், கல்வி, மொழி, பொருளாதாரம், அரசியல்,ஆட்சி நிர்வாகம் சம்மந்தமாகவும், மற்றும் பிற சட்ட ரீதியாகவும் உள்ள உரிமைகளையும், நலன்களையும் பெறவும், பாதுகாக்கவும், நிலைபெறச் செய்யவும்,
இ) இந்திய முஸ்லிம்கள் மற்றும் பிற சமுதாயங்களுக்கிடையே ஒருவருக்கொருவர் புரிந்துணர்வு, நல்லெண்ணம், நேசம், நட்புறவு, நல்லிணக்கம், ஒற்றுமை ஆகியவற்றை வளர்க்கவும் பாடுபடும்.
2021 சட்டமன்ற தேர்தல் பணிக்குழுவினர் மாநாடு
2019 மாநில மாநாடு முழக்கம்
இதயங்களை இணைப்போம் !
இந்தியாவை காப்போம்!!
2010 மாநில மாநாடு முழக்கம்
சமய நல்லிணக்கம் தழைக்கட்டும்!
சமுதாய ஒற்றுமை நிலைக்கட்டும்!!
மணிவிழா மாநாடு முழக்கம்
இதயங்களை இணைப்போம்!
சமூக நீதி சமைப்போம்!!
பொன்விழா மாநாடு முழக்கம்
நெஞ்சங்கள் இணைந்த சமுதாய நல்லுறவு
வலிமை மிக்க ஜனநாயகம் காண
அனைவருக்கும் போதிய பிரதிநிதித்துவம்