முக்கிய செய்தி

மேற்குவங்க இ.யூ.முஸ்லிம் லீக் 14வது மாநில மாநாடு

மேற்குவங்க இ.யூ.முஸ்லிம் லீக் 14வது மாநில மாநாடு
மேற்குவங்க இ.யூ.முஸ்லிம் லீக் 14வது மாநில மாநாடு
முஸ்லிம் லீக் வரலாற்றுடன் 100 ஆண்டுகளையும் கடந்த நெடிய வரலாற்று பூமி வங்க மாநிலம்.
*அகில இந்திய முஸ்லிம் லீக் 30.12.1906 அன்று உதயமானது வங்கதேசம் டாக்காவில் தான். *சுதந்திரத்திற்கு முன்பு வங்காள மாகாணத்தில் முஸ்லிம் லீக் ஆட்சி இருந்தது.
*இந்தியா சுதந்திரம் அடைந்த போது வங்கத்தின் முஸ்லிம் லீக்கின் மாகாண பிரதமர்(Premier) ஹுசைன் ஷஹீத் சுஹ்ரவர்தி, ஜோகேந்திரா நாத் மண்டல் ஆகியோரில் ஒத்துழைப்புடன் பம்பாயை சேர்ந்த பாபா சாகிப் அம்பேத்கார் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் கல்கத்தாவிலிருந்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட்டார், அதன் பின் அரசியல் சாசனம் உருவாக்கும் சபைக்கு தலைவரானார் என்பது வரலாற்று செய்தி.
* 1971ம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு 7 சட்டமன்ற உறுப்பினர்கள், 1 எம்.பி., அமைச்சரவையில் 3 முஸ்லிம் லீகர்கள் இருந்தனர். அதன்பின் தேகங்கா சட்டமன்ற தொகுதியிருந்து வங்கத் தளபதி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஏ.கே.எம். ஹசனுஜ் ஜமான் (முன்னால் அமைச்சர்) 2 முறை எம்.எல்.ஏ.வாக சிறப்புடன் பணிகளாற்றியுள்ளார். மேற்கு வங்கத்தில் முஸ்லிம் லீக் பணிகளுக்கு பெரும் துணை புரிந்தவர் சிக்கந்தர் அலி முல்லா சாகிப்.
சந்தர்பவாதிகள் பதவி, பணத்திற்காக கட்ச மாறினாலும், எளிய தொண்டர்களின் உறுதிமிக்க உழைப்பால் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பணிகள் மேற்கு வங்கத்திலும் தொய்வின்றி தொடர்கின்றது, எல்லா புகழும் இறைவனுக்கே!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கு வங்க மாநில 14வது மாநாடு 15.01.2023 அன்று நதியா மாவட்டம், நகாசி பாரா,பிக்ராம்பூர் காயிதேமில்லத் திடலில் எஸ்.டி.யூ. தேசிய பொதுச் செயலாளர் ஜபருல்லா முல்லா தலைமையில், முஸ்லிம் லீக் புதிய மாநில தலைவர் அபுல் ஹுசைன் முல்லா, பொதுச்செயலாளர் பாரூக் ஹீசைன், பொருளாளர் இத்ரீஸ் மண்டல் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளரும், மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் துவக்கவுரையாற்றினார். தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி. முஹம்மது பசீர் எம்.பி.சிறப்புரையாற்றினார். தொழிலாளர் யூனியன் தேசிய தலைவர் அஹ்மது குட்டி உன்னிகுளம், தேசிய துணைத்தலைவர் வழக்கறிஞர் பி.எம்.ஹனீப் , செயலாளர் செய்யது அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்மாநாட்டில் மாநிலம் முழுவதிலிருந்து பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
வரலாற்று சிறப்பிற்குரிய வங்க மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீண்டும் வரலாறு படைக்கும் என நம்பிக்கை கொள்வோம்,இறைவன் நாடுவான்!
-கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர்,
மாநில பொதுச் செயலாளர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்