முக்கிய செய்தி

​புதுக்கோட்டைமாவட்டம் முழுவதிலும் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில துணைத்தலைவரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் டாக்டர் கே.நவாஸ்கனி எம்.பி. அவர்கள் 26.01.2023 அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

​புதுக்கோட்டைமாவட்டம் முழுவதிலும் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில துணைத்தலைவரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் டாக்டர் கே.நவாஸ்கனி எம்.பி. அவர்கள் 26.01.2023 அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
புதுக்கோட்டைமாவட்டம் முழுவதிலும் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாநில துணைத்தலைவரும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் டாக்டர் கே.நவாஸ்கனி எம்.பி. அவர்கள் 26.01.2023 அன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

காலை 8 மணியளவில் அன்னவாசலில் முஸ்லிம்லீக் மாவட்ட தலைவர் ஹாஜி எஸ்.எ.முகம்மது அஷ்ரப்அலி தலைமையில் ஜமாத் தலைவர் அல்ஹாஜ் கே.எ.ஆர் முகம்மது யூனூஸ் ,துணைத்தலைவர் அல்ஹாஜ் எம்.எம்.ரிஷா முன்னிலையில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட பொருளாளர் ஹாஜி ஹெச்.எம்.அகமதுபாட்சா வரவேற்புரையாற்றினார் மாவட்ட எஸ்.டி.யூ.தலைவர் அன்வர்பாட்சா,நகர தலைவர் எ.அப்துல்மஜீத்,செயலாளர் எம்.முத்துகனி அப்துல்மஜீத்,பொருளாளர் எஸ்.எம்.கே.சாகுல்ஹமீது,கே.எ.ஆர்.முகம்மதுஇக்பால்,அல்அமீன்,வழக்கறிஞர் கௌதர்,மாவட்ட இளைஞரணி ஜாகிர்உசேன்,ஒன்றிய செயலாளர் என்.கபீர்அஹமது,மற்றும் ஜமாத்தார்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள், அதனை தொடர்ந்து அறந்தாங்கி தாயகம் மெட்ரிகுலேசன் பள்ளியில் கே.நவாஸ்கனி எம்.பி.அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்து வாழ்த்துரை வழங்கி மாணவ மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார்,பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது, நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்,அடுத்ததாக  அறந்தாங்கி இஸ்லாமிய மன்றம் எ.ஐ.எம்.நடத்திய கருத்தரங்கம் மற்றும் முப்பெறும் விழா அதன் தலைவர் டி.எ.என்.எ.பீர்சேக் தலைமையில் நடைபெற்றது ,செயலாளர் லக்கி.எஸ்.ராஜாமுகம்மது,பொருளாளர் எ.லியாகத்அலி,பௌசி(எ)எ.அப்துல்லா,எம்.சுலைமான் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க கௌரவ ஆலோசகர் எஸ்.ஜபருல்லா தொகுத்து வழங்கினார்,ஜமாத்தலைவர் எஸ்.என்.சேக்அப்துல்லா,மங்களம் ஸ்டோர் கனி,ஒன்றிய துணைப்பெருந்தலைவர் சீனியார்,கோபாலபட்டினம் லியாகத்அலி,நகர்மன்ற உறுப்பினர் தீன்.முகம்மதுஅபூபக்கர்.மற்றும் பல பிரமுகர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கபட்டது,நல்ல மதிப்பென்கள் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டியும் பரிசுகள் வழங்கப்பட்டன, ஃபார் யு.எஸ்.என்ற நூலை நவாஸ்கனி எம்.பி.அவர்கள் வெளியிட்டார்கள் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட தலைவர் ஹாஜி டாக்டர் எஸ்.எ.முகம்மதுஅஷ்ரப்அலி,மாவட்ட துணைத்தலைவர் கோட்டைபட்டினம் அல்ஹாபிழ் எஸ்.சாதிக்அலி ஹஜ்ரத்,ஒன்றிய செயலாளர் எஸ்.ஜபருல்லா,நகர தலைவர் எஸ்.முகம்மதுஅபூபக்கர்,நகர பொருளாளர் இ.முகம்மதுஉசேன்,எ.அய்யூப்கான்,கோட்டைபட்டினம் ஜகுபர் சாதிக், நெய்னாமுகம்மது, சஜாவுதீன், அப்துல்ரஹ்மான், ஹபிபுல்லா, ஜெகதாபட்டினம் ஜாகிர்உசேன், அம்மாபட்டினம் மௌலவி ஷிபாத் இலாஹி,மற்றும் மிகதிறலான ஜமாத்தார்கள் பொதுமக்கள்,தாய்மார்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்,அடுத்ததாக புதுக்கோட்டையில் நடைபெற்ற எம்.எஸ்.கன்ஸ்ட்ரக்ஷன் பன்னீர் (எ)எம்.சாகுல்அமீது இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்கள் எஸ்.சோஃபியா மரியம் +எம்.ரகுமத்துல்லா இவர்களை நவாஸ்கனி எம்.பி.அவர்கள் வாழ்த்தினார்கள்,பிற்பகல் மூன்று மணிக்கு புதுக்கோட்டை ஐஸ்வர்யா மஹாலில் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் எஸ்.எ.முகம்மது அஷ்ரப்அலி தலைமையில் நடைபெற்றது ,இன்ஷாஅல்லா சென்னையில் மார்ச் 10ல் நடைபெற உ‌ள்ள 75 வது ஆண்டு பவளவிழா அகில இந்திய முஸ்லிம்லீக் மாநாட்டுக்காக ஆற்ற வேண்டிய செயல்பாடுகள் குறித்து நவாஸ்கனி எம்.பி.அவர்கள் விளக்க உரையாற்றினார்கள்,வருகைதந்த நிர்வாகிகளும் ஆலோசனை வழங்கிபேசினார்கள்,புதுக்கோட்டைமாவட்டத்தில் இருந்து ஆயிரம் நபர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது என்றும்,சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வரவேற்ப்பு குழு உறுப்பினர்கள் கட்டணம் செலுத்துவதென்றும்,மகல்லா சந்திப்பு,சுவர்விளம்பரம் போன்ற மாநாட்டுக்கான பணிகளை துரிதப்படுத்துவதென்றும் தீர்மானிக்கபட்டது,வருடந்தோரும் மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி உதவி தொகைவழங்கிவரும் கே.நவாஸ்கனி எம்.பி.அவர்களை வாழ்த்தி பாராட்டியும் தீர்மானிக்க பட்டது ,புதுக்கோட்டை நகரில் பிரமாண்ட மான வரவேற்பு ஏற்பாடுகளை செய்த எம்.எஸ்.கன்ஸ்ட்ரக்ஸன் பன்னீர் அவர்களுக்கும்,ஒத்துழைப்பு வழங்கிய எ.எம்.எஸ்.இப்ராஹிம் பாபு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்க பட்டது,நிறைவாக மாவட்ட செயலாளர் பி.எஸ்.அல்லாபிச்சை நன்றி கூற,எஸ்.சாதிக்அலி ஹஜ்ரத் துஆ உடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

நிகழ்ச்சிக்காக உறுப்பினர்களை தொடர்பு கொள்ளும் பொருப்பாளராக மாவட்ட  இளைஞரணி தலைவர் என்.முகம்மது இஸ்மாயில் அவர்களை நியமிக்கப்பட்டது.