முக்கிய செய்தி

சென்னையில் மேசியா செய்தி சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு விழா 2022. செய்தி ஊடகவியலாளர்கள் 48 நபர்களுக்கு மேசியா விருது வழங்கப்பட்டது.

சென்னையில் மேசியா செய்தி சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு விழா 2022.  செய்தி ஊடகவியலாளர்கள் 48 நபர்களுக்கு மேசியா விருது வழங்கப்பட்டது.
சென்னையில் மேசியா செய்தி சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு விழா 2022.

செய்தி ஊடகவியலாளர்கள் 48 நபர்களுக்கு மேசியா விருது வழங்கப்பட்டது.

சென்னை, டிச. 24-
மேசியா செய்தி பத்திரிகையின் சார்பில் நடைபெற்ற பத்தாம் ஆண்டு செய்தி ஊடகவியலாளர்களுக்கான கிறிஸ்துமஸ் சிறப்பு விழா - 2022 நிகழ்ச்சியில் பல்வேறு பத்திரிகை சார்ந்த ஊடக நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேசியா செய்தி பத்திரிகையின் ஆசிரியர், வெளியீட்டாளர் கே. குணசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மேசியா செய்தியின் தலைமை நிருபரும், கிரேஸ் வெல்ஃபேர் அசோசியேசனின் தேசிய பொதுச் செயலாளருமான பி. சின்னையா முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் சிறுபான்மை மக்கள் நல கட்சியின் தேசியத் தலைவரும், கிறிஸ்தவ அரசியல் பத்திரிகையின் ஆசிரியருமான பேராயர். டாக்டர். சாம் ஏசுதாஸ் கேக் வெட்டி சிறப்புரையாற்றினார்.

தலைமைச் செயலக அனைத்து பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் தலைவரும் மீடியா சேம்பர் நிறுவனத் தலைவருமான தலைமைச் செயலக க. குமார், மணிச்சுடர் பத்திரிகையின் வெளியீட்டாளரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுச்செயலாளருமான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முகமது அபூபக்கர், பொருளாதார நிபுணர். டாக்டர் ஓ அறிவழகன், அறநெறி மக்கள் கட்சியின் தலைவரும் முற்றம் பத்திரிகையின் ஆசிரியருமான விசவனூர் வே. தளபதி, காவல்துறை உதவி ஆணையர் எஸ். ஜான் சுந்தர், மேசியா செய்தியின் முதன்மை நிருபர் டாக்டர் ஏ.கா. பாண்டியன், மீடியா சேம்பர் இணைச் செயலாளர் ராஜ்குமார், மாலை முரசு. சீனிவாசன், விரிச்சுவல் டைம்ஸ் இணை ஆசிரியர் பி. எஸ். வாசன், மாலயுகம் ஆசிரியர் முகம்மது இப்ராஹிம், மக்கள் ரிப்போர்ட் ஆசிரியர் அபுஃபைசல், துணை ஆசிரியர் ஏ. முகம்மது ஷிப்லி, தலைமைச் செய்தி நாளிதழ் தலைமை நிருபர் மணிவண்ணன், போலீஸ் டுடே துணை ஆசிரியர் முருகேசன், தகவல் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் ஆசிரியர் ஆ. இருதயராஜ்,  ட்ரு நியூஸ்   ஆசிரியர் கே. விஜயராகவன், இந்துஸ்தான் கலர்ஸ் ஆசிரியர் ஆர். கோபி, தமிழக திராவிடர் கட்சியின் தேசிய தலைவர் எஸ் மூர்த்தி, கே அர்ஜுனன், போலீஸ் டுடே தலைமை நிருபர்கள்: எ. சுந்தரமூர்த்தி,   எஸ். அருண், எம். விமல் குமார், எம். அசேன் ஷா, கோ. விஜய், போலீஸ் டுடே  நிருபர் ஹென்றி அருள்சாமி, ட்ரு நியூஸ் நிருபர்கள் : வி. சங்கர், வி. ஹேமமாலினி, வி. மேரி, வி. சௌந்தர்யா, வி. பூஜா, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்: சகாயம், சி. சரவணன், விழா குழுவினர்: அகில இந்திய கிறிஸ்தவர்கள் முன்னேற்ற சங்கத்தின் தேசிய பொதுச்செயலாளர் பேராயர். லிவிங்ஸ்டன், கிறிஸ்தவ மக்கள் பேரவையின் தலைவர் பாஸ்டர். எஸ். இ. ஜப சக்தி, எஸ்பிஐசி பேராயத்தின் பேராயர். ஸ்காட் டேவிட், பாஸ்டர். எ. ராஜ்குமார், தமிழ்நாடு மாநில கிரேஸ் வெல்ஃபேர் அசோசியேசன் செயலாளர் பி. பிரபாகரன், மாநில ஊனமுற்றோர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி. சிவபாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக கிறிஸ்துமஸ் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர், விழாவில் கலந்து கொண்ட 48 சிறப்பு விருந்தினர்களுக்கு மேசியா விருது வழங்கப்பட்டது,

மேசியா செய்தி தலைமை நிருபர் டி. மதன் இம்மானுவேல் வரவேற்புரையாற்றினார், மேசியா செய்தியின் கௌரவ ஆலோசகர் டாக்டர் பி. ஜஸ்டின் தங்கராஜ் துவக்க ஜெபம் மற்றும் தொகுப்புரையாற்றினார் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். மேசியா செய்தி ஆசிரியர் கே. குணசேகரன் அனைவருக்கும் நன்றி கூறினார்.