முக்கிய செய்தி

சமுதாய தலைவரிடம் வாழ்த்து பெற்றார்

சமுதாய தலைவரிடம் வாழ்த்து பெற்றார்
சமுதாய தலைவரிடம் வாழ்த்து பெற்றார்..... தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு முனைவர் கோவி செழியன் அவர்கள் இன்று (01-10-2024) மாலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையமான காயிதே மில்லத் மன்ஜிலுக்கு சென்று சமுதாய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபுபக்கர் Ex MLA அவர்கள், மாநில முதன்மை துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் Ex MP அவர்கள், மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் மக்கி, மாணவரணி தேசிய பொதுச் செயலாளர் முகம்மது அர்சத் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.