முக்கிய செய்தி

தலைமை நிலைய அறிவிப்பு

தலைமை நிலைய அறிவிப்பு
தலைமை நிலைய அறிவிப்பு
 
 _வயநாடு பேரிடர் நிதி_ 
இ.யூ.முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட, பிரைமரி நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்களின் கவனத்திற்கு ....
 
பேரன்புரையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
 
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால், சொந்தங்களை இழந்து, வீடுகள் அழிக்கப்பட்டு, நிராயுதபாணிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தினமும் 10 ஆயிரம் நபர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. சி.எச்.முகமது கோயா சென்டர், ஷிகாப் தங்ஙள் சென்டர் மூலமாக மருத்துவ உதவிகள் அளிக்கப்படுவதோடு அவ்வப்போது தேவையான நிவாரணப் பணிகளை கேரள மாநில நிர்வாகிகளும், முஸ்லிம் யூத் லீகின் ஒய்ட் கார்ட் (WHITE GUARD) தொண்டர்களும், தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர். 
 
நானும், பி.ஏ.சி. தேசிய சேர்மன் செய்யது சாதிக் அலி சிகாப் தங்ஙள், தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக் குட்டி எம்.எல்.ஏ., கேரள மாநில பொதுச் செயலாளர் பி.எம்.ஏ. சலாம் மற்றும் இயக்கத்தின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களோடு வயநாடு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்த்தோம். 
நிலச்சரிவு நடந்த நிகழ்வுகளை உயிர் தப்பியவர்கள் கண்ணீர் மல்க விளக்கிய போது நமது நொஞ்சம் கனத்து துயரம் அடைந்தது. 
 
அனைத்தையும் இழந்து நிராயுதபாணிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வாக இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில், முன்பு உத்தரப் பிரதேச மாநிலம் முசப்பர் நகர் பகுதியில் உருவாக்கிக் கொடுத்ததைப் போன்று, புதிய நகரியம் (Township) உருவாக்கி குறைந்தது 100 வீடுகள் மற்றும் மஸ்ஜித், பள்ளிக்கூடம் உள்ளிட்டவை இடம்பெறக் கூடிய திட்டம் இறை அருளால் விரைவில் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இன்ஷா அல்லாஹ். 
புதிய நகரியம் உருவாக்கும் பணிகளுக்கு கேரள மாநிலத்தில் நல் உள்ளம் கொண்டோர் தாரளமாக நிவாரண நிதியை தினந்தோறும் அள்ளிக் கொடுத்து வருகின்றனர். மற்ற மாநிலங்களில் இருந்தும் நிதி அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம். அண்டை மாநிலமான நம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வயநாடு மக்களின் துயர் துடைத்து அரவணைத்திட நிவாரண நிதியை தாரளமாக கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் 31.08.2024 தேதிக்குள் செலுத்திட வேண்டுகிறோம். 
இ.யூ.முஸ்லிம் லீகின் மாநில, மாவட்ட, பிரைமரி நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள், முனைப்போடு, வயநாடு பேரிடர் நிவாரண நிதியை பிரமுகர்கள், வணிகர்கள், பொதுமக்கள், தாய்மார்கள், இளைஞர்கள் என அனைவரையும் சந்தித்து நிதி திரட்டி வயநாடு மக்களின் வளமான வாழ்வுக்கு நம்மாலான அனைத்தையும் செய்வோம். எல்லாம் வல்லவனின் பேரருளை வேண்டுவோம். வயநாடு பேரிடர் நிவாரண நிதிக்கு எல்லோரும் தங்களால் ஆன உதவிகளைத் தந்து உதவிட வேண்டுகிறோம். 
 
(ஒப்பம்)
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் Ex.MP,
தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்