முக்கிய செய்தி

தலைமை நிலைய அறிவிப்பு

தலைமை நிலைய அறிவிப்பு
ஜூலை 30 அன்று கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை கொட்டியது: காட்டாறு வெள்ளக்காடாக மாறியது மலைமுகடுகள் சரிந்தன; பெரும் பாறைகள் மலைகளில் இருந்து உருண்டோடி காட்டாறு வெள்ளத்தில் வீழ்ந்தன. நிலச்சரிவை ஏந்திக்கொண்டு மலையிலிருந்து புரண்டோடிய காட்டாற்று வெள்ளம் அதன் பாதையில் இருந்த ஊர்களை எல்லாம் சூறையாடிச் சென்றது. இந்த வெள்ளமும் நிலச்சரிவும் 32 ஊர்களைப் பாதித்து பல விபரீதங்களை ஏற்படுத்தி விட்டது. வயநாடு பகுதியில் உள்ள முண்டக்கல் கிராமம் முழுவதும் இருந்த இடம் தெரியாமல் ஆக்கப்பட்டுவிட்டது. சூரல்மலை மற்றும் அதன் அருகில் இருந்த மேப்பாடி பலத்த சேதத்தை சந்தித்து இப்போது வெறும் கட்டாந்தரையாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றது. நபி நூஹ் (அலை) காலத்தில் ஏற்பட்ட யுகப் பிரளயத்தை நினைவூட்டும் வகையில் இந்தப் பேரிடர் வயநாட்டில் நிகழ்ந்துவிட்டது. ஒன்றிய அரசு உடனடியாக ராணுவத்தை அனுப்பி பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உதவிகள் வழங்கி வருகிறது. கேரள அரசும் அரசு அதிகாரிகளும் தங்களால் ஆன அனைத்துக் காரியங்களையும் தொடர்ந்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் நிவாரணப்படை அனுப்பப்பட்டு ஆவன செய்து கொண்டிருக்கின்றார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பி.ஏ.சி. தேசிய சேர்மன் இமாமுல் ஹிந்த் சையது சாதிக் அலி சிஹாப் தங்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளர் ல்க. குஞ்ஞாலிகுட்டி எம்.எஸ்.ஏ. கேரள இளைஞர் அணி தலைவர் சையது முனவ்வர் அலி தங்கள் மற்றும் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார்கள். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி முகம்மது பஷீர் எம்.பி, பொருளாளர் பி.வி அப்துல் வஹாப் எம்.பி ஆகியோரும் மற்றும் எம்.எல்.ஏக்களும் வயநாட்டில் நிவாரணப் பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். காங்கிரஸ் கட்சி தலைவரும் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி., காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும், வயநாடு வந்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறிச் சென்றுள்ளனர். வாழக் கொடுத்து வைத்தவர்களுக்கு வாழ்த்துக் கூறுவோம்! மறைந்து சென்ற மனித நேயர்களுக்கு இறையருளை வேண்டுவோம். ஏற்பட்ட அழிவிலிருந்து வாழும் மக்களைக் காப்பாற்றும் பொறுப்பில் நம்மை இணைத்துக் கொள்வோம். முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு அரசு மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் உதவி செய்து வருகின்றனர். இயூ. முஸ்லிம் லீக் சார்பிலும் மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது. சி.ஹெச். முஹம்மது கோயா சென்டர், சிஹாப் தங்கள் சென்டர் சார்பில் மருத்துவ உதவிகள் வழங்கப்படுகின்றன. வெள்ளத்தில் வீடு, உடைமைகளை இழந்து நிர்கதியாக நிற்பவர்களை பாதுகாப்பான இடத்தில் குடியமர்த்திட இயூ, முஸ்லிம் லிகின் சார்பில் முன்பு உத்திர பிரதேச மாநிலம் முசப்பர் நகர் பகுதியில் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ள சிஹாப் தங்கள் நகரைப் போன்று வயநாடு பகுதியிலும் 'புதிய நகரியம்' (Township) உருவாக்கிக் கொடுக்கப்படுமென இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய பி.ஏ.சி. சேர்மன் சையது சாதிக்அலி சிஹாப் தங்கள் அறிவித்துள்ளனர். இவ்வுயரிய பணிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் உள்ள அனைவரும் பேரிடர் நிவாரண நிதி திரட்டி அளிப்பது கடமையாகும். அதைத் தொடரும் வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் கேரள வயநாடு பேரிடர் நிவாரண நிதியை வழங்கிடுவோம்! வாழும் மக்களின் வளமான வாழ்வுக்கு நம்மிலான அனைத்தும் செய்வோம்! எல்லாம் வல்லவன் பேரருளை வேண்டுவோம்! வயநாடு பேரிடர் நிவாரண நிதிக்கு எல்லோரும் தங்களால் ஆன உதவிகளைத் தந்து உதவிட வேண்டுகிறோம். பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக். வயநாடு பேரிடர் நிவாரண நிதி 1. பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் 2 . அந்தியூர் ஹாத்தீம்தாய் 3 . இயூ, முஸ்லிம் லீக் திருப்பூர் 45வது வார்டு (திருப்பூர் வடக்கு 4. எஸ்.கே.எம். ஹபீபுல்லாஹ், கடையநல்லூர் খ. 25,000 5. 1,000 ரூ. 35000 গ. 10,000 நிவாரண நிதி அளிக்க வேண்டிய வங்கி விவரங்கள் BANK DETAILS Account Name: IUML TN RELIEF FUND Account Number: 030502000005262 IFSC Code: IOBA0000305 INDIAN OVERSEAS BANK SWIFT Code: IOBAINBB305 arden MITHIALPET BRANCHE BRANCH) CHENNAΑΙ IUML IN RELIEF FUND màng Qu எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். தலையை நிலையம் : இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காயிதே மில்லத் மன்ஸில், 36, மரைக்காயர் லெப்பை தெரு, மண்ணடி, சென்னை - 600 001