முக்கிய செய்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தலைமை நிலைய அறிவிப்பு வயநாடு பேரிடர் நிதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட, பிரைமரி நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்களின் கவனத்திற்கு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,  தலைமை நிலைய அறிவிப்பு  வயநாடு பேரிடர் நிதி  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட, பிரைமரி நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்களின் கவனத்திற்கு
இறைவனின் திருப்பெயரால்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
 
தலைமை நிலைய அறிவிப்பு
 
வயநாடு பேரிடர் நிதி :
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட, பிரைமரி நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்களின் கவனத்திற்கு
 
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால், சொந்தங்களை இழந்து, வீடுகள் அழிக்கப்பட்டு, நிராயுதபாணிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டடுள்ளவர்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தினமும் 10 ஆயிரம் நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. சி.எச். முகமது கோயா சென்டர், ஷிகாப் தங்கள் சென்டர் மூலமாக மருத்துவ உதவிகள் அளிக்கப்படுவதோடு அவ்வப்போது தேவையான நிவாரணப் பணிகளை கேரள மாநில நிர்வாக்களும், முஸ்லிம் யூத் லீகின் ஒய்ட் கார்ட் (தீபிITE HUWHஞ) தொண்டர்களும், தினந்தோறும் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் வீடுகளை இழந்து தற்போது வாடகை இல்லங்களில் தங்கியிருப்பவர்களுக்குத் தேவையான உணவு, சமையலுக்குத் தேவையான ஸ்டவ் அடுப்பு,
 
வாளி, தண்ணீர் ஐக்கு உள்ளிட்ட அடிப்படைப் பாத்திரங்கள் 500 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இயற்கையின் சீற்றத்தால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள முண்டக்கை கிராமத்தில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள 691 குடும்பங்களுக்கு ரூ.15,000, 40 வியாபாரிகளுக்கு ரூ.50,000, மக்கள் போக்குவரத்திற்கு 4 ஜீப் மற்றும் 4 ஆட்டோ ரிக்ஷா வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளதோடு துபாய் கே. எம்.சி.சி. ஒருங்கிணைப்பில் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 50 இளைஞர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என கேரள தலைவர் செய்யது சாதிக்அலி சிஹாப் தங்கள், தேசிய பொதுச் செயலாளர் பி.கே. குஞ்ஞாலிக்குட்டி எம்.எல்.ஏ. உள்ளிட்ட தலைவர்கள் நேற்று (21.08.2024) பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளனர்.
 
வாழ்விடத்தை இழந்தவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக இ.யூ.முஸ்லிம் லீக் சார்பில், முன்பு உத்தரப் பிரதேச மாநிலம் முசப்பர் நகர் பகுதியில் உருவாக்கிக் கொடுத்ததைப் போன்று, 40 ஏக்கர் 11 நிலப்பரப்பில் புதிய நகரியம் (powniniஜி உருவாக்கி குறைந்தது 100 வீடுகள் மற்றும் மஸ்ஜித் பள்ளிக்கூடம் உள்ளிட்டவை இடம்பெறக் கூடிய திட்டம் இறை அருளால் விரைவில் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது இன்ஷா அல்லாஹ். புதிய நகரியம் உருவாக்கும் பணிகளுக்கு கேரள மாநிலத்தில் நல் உள்ளம் கொண்டோர் தாரளமாக நிவாரண நிதியை தினந்தோறும் அள்ளிக் கொடுத்து வருகின்றனர். மற்ற மாநிலங்களில் இருந்தும் நிதி அளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
 
அண்டை மாநிலமான நம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் வயநாடு மக்களின் துயர் துடைத்து அரவணைத்திடநிவாரண நிதியை தாராளமாக கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில்
 
3108.2024 தேதிக்குள் செலுத்திட வேண்டுகிறோம்.
இ.யூ.முஸ்லிம் லீகின் மாநில, மாவட்ட பிரைமரி நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள், முனைப்போடு, வயநாடு பேரிடர் நிவாரண நிதியை பிரமுகர்கள், வணிகர்கள், பொதுமக்கள், தாய்மார்கள், இளைஞர்கள் என அனைவரையும் சந்தித்து நிதி திரட்டி வயநாடு மக்களின் வளமான வாழ்வுக்கு நம்மாலான அனைத்தையும் செய்வோம். எல்லாம் வல்லவனின் பேரருளை வேண்டுவோம். வயநாடு பேரிடர் நிவாரண நிதிக்கு எல்லோரும் தங்களால் ஆன உதவிகளைத் தந்து உதவிட வேண்டுகிறோம்.
 
நிவாரண நிதி அளிக்க வேண்டிய வங்கி விவரங்கள் : Account Name: IUML TN RELIEF FUND
 
Account Number: 030502000005282
IFSC Code: 10BA0000305/SWIFT Code: IOBAINBB305 INDIAN OVERSEAS BANK - MUTHIALPET BRANCH, CHENNAI
 
காசோலை / கேட்பு வரைவோலையை IUML TN RELIEF FUND என்ற பெயரில் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
 
பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்
தேசிய தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
தலைமை நிலையம்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், காயிதே மில்லத் மன்ஸில், 36, மரைக்காயர் லெப்பை தெரு, மண்ணடி, சென்னை -600001.