முக்கிய செய்தி

இ.யூ. முஸ்லிம் லீக் தலைமையகத்தில் இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்று விழா

இ.யூ. முஸ்லிம் லீக் தலைமையகத்தில் இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியேற்று விழா
தலைமை நிலைய அறிவிப்பு

 

 
இ.யூ. முஸ்லிம் லீக் தலைமையகத்தில்
இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு
தேசியக் கொடியேற்று விழா....
 
இந்திய சுதந்திர தின 78வது ஆண்டு விழாவையொட்டி 15.08.2024 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகமான சென்னை, மண்ணடி, காயிதே மில்லத் மன்ஸிலில் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம் காதர் மொகிதீன் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றுகிறார்.இந்நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில |நிர்வாகிகள், சென்னை கிழக்கு, சென்னை மேற்கு, சென்னை வடக்கு, சென்னை தெற்கு, காஞ்சிபுரம், செங்கல்பட்டு வடக்கு, செங்கல்பட்டு தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள், முஸ்லிம் யூத் லீக், முஸ்லிம் மாணவர் பேரவை, சுதந்திர தொழிலாளர் யூனியன், விமன்ஸ் லீக், கே.எம்.சி.சி., தகவல் தொழில்நுட்ப அணி, சுதந்திர கிஸான் சங்கம், வர்த்தகரணி, லாயர்ஸ்போரம், பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்க கேட்டுக் கொள்கிறோம்.
(ஒப்பம்) கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் மாநில பொதுச் செயலாளர், இ.யூ.முஸ்லிம் லீக்