முக்கிய செய்தி

​இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அரசியல் ஆலோசனைக்குழு (Political Advisory Committee) கூட்டம்.

​இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அரசியல் ஆலோசனைக்குழு (Political Advisory Committee) கூட்டம்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அரசியல் ஆலோசனைக்குழு (Political Advisory Committee) கூட்டம்.
---
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அரசியல் ஆலோசனைக்குழு (பி.ஏ.சி), அவசரக் கூட்டம் 12.01.2024 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு கேரள மாநிலம் மலப்புரம் மாவட்ட லீக் தலைமை நிலையத்தில் தேசிய பி.ஏ.சி.சேர்மன் செய்யிது சாதிக் அலி சிகாப் தங்கள் தலைமையில் தேசிய தலைவர்  பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் முன்னிலையில் நடைபெற்றது. தேசிய பொதுச் செயலாளரும், கேரள சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவருமான பி.கே.குஞ்ஞாலிக் குட்டி எம்.எல்.ஏ. வரவேற்று, கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி பேசினார். தேசிய அமைப்புச் செயலாளர் இ.டி. முஹம்மது பசீர் எம்.பி., தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர், கேரள மாநில பொதுச் செயலாளர் பி.எம்.ஏ.சலாம், தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், தேசிய துணைச்செயலாளர் சி.கே.ஜீ பைர், இளைஞர் லீக் தேசிய பொதுச் செயலாளர் பைசல் பாபு, துணைத்தலைவர் அஸ்ரப் அலி, எம்.எஸ்.எஃப். தேசிய தலைவர் அஹ்மது சாஜு,பொதுச் செயலாளர் எஸ்.எச்.முஹம்மது அர்ஸத், பிரவாசி லீக் பொதுச் செயலாளர் செய்து அலவி ஆகியோரும் இணைய வழியில் தேசிய பொருளாளர் பி.வி.அப்துல் வஹாப் எம்.பி., துணைத் தலைவர்கள் அப்துஸ்ஸமது சமதானி எம்.பி., சிராஜ் இப்ராஹிம் சேட், செயலாளர் பிகார் நயீம் அக்தர், வழக்கறிஞர் ஹாரிஸ் பிரான், இளைஞர் லீக் தேசிய தலைவர் ஆசிப் அன்சாரி ஆகியோர்  கருத்துரையாற்றினர். 

இக்கூட்டத்தில் டில்லி தேசிய தலைமை நிலையம் காயிதேமில்லத் சென்டர் கட்டிட சட்டபூர்வ நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்பட்டது, விரைவில் அதன் பதிவு செய்தல் மற்றும் திறப்பு விழா நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

கேரள, தமிழ்நாடு மற்றும்  புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அமைப்பு தேர்தல் நடைபெற்றுள்ளது. மற்ற மாநிலங்களில் இரண்டு வார காலத்திற்குள் நிறைவு செய்து, தேசிய கவுல்சில் கூட்டத்தை காயிதேமில்லத் சென்டர் திறப்பு விழா அன்று நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் கேரளா, தமிழ்நாடு மாநிலங்களில் முறையே காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி நம் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிட முஸ்லிம் லீக் மாநில நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டிட இக்கூட்டம் கேட்டுக்கொள்வதோடு  மற்ற மாநிலங்களில் இந்தியா கூட்டணி வெற்றிக்கு துணை நின்றிட பணிகளாற்றுவதென இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அரசியல் ஆலோசனைக்குழு (Political Advisory Committee) கூட்டம்.