முக்கிய செய்தி

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ஊராட்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய சமுதாய நலக்கூடத்தின் அடிக்கல் நாட்டு விழா நிகழ்வில் முக்கிய நிர்வாகிகளுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் க

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ஊராட்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய சமுதாய நலக்கூடத்தின் அடிக்கல் நாட்டு விழா நிகழ்வில் முக்கிய நிர்வாகிகளுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ் க
இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் ஊராட்சியில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான திரு வைகோ அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர் நிதி ரூபாய் 30 லட்சம் மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர் பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 20 லட்சம் என 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ள புதிய சமுதாய நலக்கூடத்தின் அடிக்கல் நாட்டும் விழா நிகழ்வில் மதிமுக தலைமை நிலைய செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு துறை வைகோ மற்றும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட செயலாளருமான திரு.காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே நவாஸ் கனி எம்பி பங்கேற்று உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் திரு.சோமசுந்தரம், பொறியாளர் கோகுல கண்ணன், இராமேஸ்வரம் நகர்மன்ற தலைவர் கே.இ.நாசர் கான், துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் வேலுச்சாமி ,மதிமுக மாநில மீனவர் அணி செயலாளர் எம்.பேட்ரிக், மறுமலர்ச்சி திமுகவின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் வி.கே.சுரேஷ், தணிக்கைக் குழு உறுப்பினர் கே.ஏ.எம்.குணா, பாம்பன் ஊராட்சி மன்றத் தலைவி திருமதி அகிலா பேட்ரிக், புதுமடம் ஊராட்சி மன்ற தலைவர் காமில் உசேன், திமுக மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன் ,ஆற்றங்கரை ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் நூருல் அபான் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை செயலாளர் அப்துல் ஜப்பார் , மாவட்ட தலைவர் வருசை முஹம்மது, மாவட்ட துணை தலைவர் சாதுல்லாஹ் கான் , மாநில தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் சாபிர் கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.