முக்கிய செய்தி

அதிகரித்து வரும் தேவைப்பாட்டை ஈடுகட்டும் வகையில் நிலக்கரி உற்பத்தியை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? மக்களவையில் கே.நவாஸ்கனி எம்.பி. கேள்வி

அதிகரித்து வரும் தேவைப்பாட்டை ஈடுகட்டும் வகையில் நிலக்கரி உற்பத்தியை மேம்படுத்த  எடுக்கப்பட்டுள்ள  நடவடிக்கைகள் என்ன? மக்களவையில் கே.நவாஸ்கனி எம்.பி. கேள்வி
அதிகரித்து வரும் தேவைப்பாட்டை ஈடுகட்டும் வகையில்
நிலக்கரி உற்பத்தியை மேம்படுத்த  எடுக்கப்பட்டுள்ள  நடவடிக்கைகள் என்ன?
மக்களவையில் கே.நவாஸ்கனி எம்.பி. கேள்வி

புதுடெல்லி, டி.ச.21--
அதிகரித்து வரும் தேவைப்பாட்டை ஈடுகட்டும் வகையில் நிலக்கரி உற்பத்தியை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள  நடவடிக்கைகள் என்ன என்று மக்களவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவரும், நாடாளுமன்ற உறுப்பின ருமான கே.நவாஸ்கனி எம்.பி., நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் எழுப்பிய கேள்வியின் (நட்சத்திர குறியீடு இடப்படாத கேள்வி எண் 1375, தேதி 14-12-2022) விபரம் வருமாறு:-

நிலக்கரித்துறை அமைச்சர் பின்னர் வரும் கேள்விகளுக்கு பதில் அளிப்பாரா? 
(அ) நாட்டில் நிலக்கரி விநியோகத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதா?

(ஆ) அப்படியானால் இந்த பிரச்சனைக்கு தீர்வுகாண எடுக்கப்பட்டுள்ள மற்றும் எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன? நடவடிக்கைகள் எடுக்கும்போது அதிகரித்து வரும் தேவையை ஈடுகட்டும் வகையில் கோல் இந்தியா நிறுவனத்தின் உற்பத்தி போதுமான அளவிற்கு இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

(இ) குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு நிலக்கரி தேவை அதிகரித்து இருக்கும் என்பதை ஒன்றிய அரசு கவனத்தில் எடுத்துள்ளதா?

(ஈ) அப்படியானால் நிலக்கரி சுரங்க திறன் மற்றும் உற்பத்தியை மேம்படுத்த அரசு எடுத்துள்ள மற்றும் எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன?

இதற்கு பாராளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரல்லாத் ஜோஷி அளித்த பதில் வருமாறு:-

(அ) மற்றும் (ஆ) நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை இல்லை.  2022 - 2023 -ம் ஆண்டில் (2022 நவம்பர் மாதம் வரை இந்திய முழுவதும் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தி முந்தைய ஆண்டின் இதே காலத்தை காட்டிலும் 17 சதவீதம் அதிகரித்து 44.81 கோடி டன்னிலிருந்து 52.42 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. (இந்த புள்ளி விவரம் தற்காலிகமானது.)
இதே காலத்தில் நாட்டில் நிலக்கரி விநியோகம் 7.33 சதவீதம் அதிகரித்து 52.10 கோடி டன்னிலிருந்து 55.82 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
மின்துறைக்கான நிலக்கரி தேவைப்பாடு அதிகரித்து வருவதை அடுத்து கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலத்தில் கோல் இந்திய நிறுவனத்தின் நிலக்கரி அளிப்பு 12 சதவீதம் அதிகரித்து 33.98 கோடி டன்னிலிருந்து 38.06 கோடி டன்னாக உயர்ந்தது.
மின் துறைக்கான நிலக்கரி விநியோக பிரச்சனைகளுக்கு தீர்வுகாண மின் துறை, நிலக்கரி, ரயில்வே அமைச்சகங்கள், மத்திய மின்சார ஆணையம், கோல் இந்தியா நிறுவனம் மற்றும் சிங்ரேனி கோலியரீஸ் நிறுவனம் ஆகியவற்றின் பிரதி நிதிகள் அடங்கிய அமைச்சகங்களுக்கு இடையேயான துணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பிரதிநிதிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடி அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்க பல்வேறு செயல்பாட்டு முடிவுகளை எடுத்து வருகின்றனர். மேலும், தற்காலிக தேவைகள் மற்றும் இருப்பு நிலவரங்களுக்கான பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு வருகின்றனர்.

இதுமட்டுமின்றி ரயில்வே வாரியத் தலைவர் நிலக்கரித் துறை அமைச்சகச் செயலாளர் சுற்றுச்சூழல், வன மற்றும் பருவ நிலை மாறுபாட்டு அமைச்சகச் செயலாளர் மற்றும் மின் துறை அமைச்சக செயலாளர் ஆகியவை அடங்கிய  அமைச்சகங் களுக்கிடையேயான குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நிலக்கரி விநியோகத்தை அதிகரித்தால் மற்றும் மின் உற்பத்தி திறனை மேம்படுத்தும் பணிகளை கண்காணித்து வருகின்றன. 

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சகத் தின் செயலாளர் மற்றும் மத்திய மின்சார ஆணையத்தின் தலை வர்களையும் தேவைப்பட்டால் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சொந்த தேவைகளுக்காக நிலக்கரியை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் நிலக்கரி அளிப்பும் கண்காணிக் கப்பட்டு வருகிறது.

(இ) மற்றும் (ஈ) : இந்தியா வில் எரிசக்திக்கு நிலக்கரி முக்கியமான மூலப்பொருள் 2030 - 2035 -ம் ஆண்டுகளில் நிலக்கரி தேவைப்பாடு புதிய உச்சத்தை தொடும். நாட்டில் நிலக்கரி போதுமான அளவிற்கு கிடைப்பதற்காக அரசு பின்வரும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

1. ஏற்கனவே உள்ள சுரங்கங்களின் திறன் மற்றும் புதிய சுரங்கங்கள் திட்டங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தி கோல் இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களிலிருந்து நிலக்கரி உற்பத்தியை அதிகரித்தல்.

2. வணிக நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தியை அதிகரித்தல்.

3. சொந்த தேவைக்காக உற்பத்தி செய்யும் சுரங்க உரிமையாளர்கள் (அணுத் தாதுக்கள் நீங்கலாக) சொந்த தேவைப்பாட்டை நிறைவேற்றியதைபோக எஞ்சியுள்ள ஆண்டு உற்பத்தி தாதுக்களில் (நிலக்கரி உட்பட) 50 சதவீத வரையிலான அளவை வெளிச்சந்தைகளில் விற்பனை செய்வதற்கு வழிவகை செய்யும் சுரங்கங்கள் மற்றும் தாதுக்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச்சட்டம் 2021 அமல்படுத்துதல்.
4. துரித இணைப்புகள், ரயில் திட்டங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்தை மேம்படுத்தி நிலக்கரி போக்குவரத்தை மேம்படுத்துதல்.

5. செயல்பாடுகளை டிஜிட்டல் மையமாக்குதல் மற்றும் நிறுவன உள்வள ஆதார திட்டங்களை அறிமுகப்படுத்துதல் போன்றவற்றின் வாயிலாக மொத்த உற்பத்தி தொழில் நுட்பம் மற்றும் சுரங்கங்களின் உற்பத்தி திறனை அதிகரித்தல்.

6. நிலக்கரி துறை அமைச்ச கம் இந்த நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்.

7. நிலக்கரி சுரங்கங்கள் துரிதமாக செயல்படும் வகையில் அனுமதிகளை விரைந்து வழங்கும் வகையில் ஒற்றைசாளர அனுமதி முறை அமல்படுத்துதல் இவ்வாறு அமைச்சர் பதிலளித்தார்.