முக்கிய செய்தி

கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் Ex.MLA வயநாடு நிலச்சரிவு பகுதிகளை பார்வையிட்டார்

கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் Ex.MLA வயநாடு நிலச்சரிவு பகுதிகளை பார்வையிட்டார்
வயநாடு நிலச்சரிவு பகுதிகளை கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் பார்வையிட்டார்....
--
நேற்று(11.08.2024) ஞாயிறு காலையில் நீலகிரி மாவட்டம் பாடந்தரையில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் வி.கே. ஹனீபா மகள் திருமணத்தில் பங்கேற்று விட்டு கேரள மாநிலம் வயநாடு மாவட்ட செயலாளர் முஹம்மது அவர்களுடன் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றோம். பயணத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதிலிருந்து முஸ்லிம் லீக் சார்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், நிவாரண பணிகளில் மனித நேயத்துடன் யூத் லீகினர் ஆற்றி வரும் சேவைகளை விளக்கினார். பயணத்திற்கு முன்பாக வெள்ளம் சூழ்ந்த இடத்திற்கு கயிறு ஸ்கிப்பிங் மூலம் சென்று மருத்துவ பணிகளாற்றிய சிகாப் தங்கள் சென்டரில் செவிலியர் சபீனாவை பாராட்டினோம்.
இயற்கை சூழ்ந்த வயநாடு வனப்பகுதியில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்தோம், மேப்பாடி முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் பார்க்கும் போது பரிதாபமாக இருந்தது, பலர் குடும்பத்தினர்களை இழந்து பரிதவிக்கின்றனர், அதிர்ச்சி இருந்து மீண்டு வர எத்தனை நாள் ஆகுமோ!
 
முஸ்லிம் யூத் லீகின் WHITE GUARD - (வெள்ளை பாதுகாவளர்கள்) சுழன்று, சுழன்று பணிகளாற்றிக் கொண்டிருந்தனர். சூரல் மலா - முன்டக்கை பாலம் அருகே சென்ற போது இடி - மின்னலுடன் கடும் மழை! அதை கடந்து செல்ல காவல் துறையினர் தடுத்தனர், கடும் மழையில் நனைந்து கொண்டே தொண்டர்களுடன் கலந்துரையாடினோம்.
நிகழ்வில் வயநாடு மாவட்ட தலைவர் கே.கே. அஹமது ஹாஜி, மாநில செயலாளரும், மேனாள் சட்ட மன்ற உறுப்பினருமான முஹம்மது குட்டி, முஸ்லிம் யூத் லீக் மாநில பொருளாளர் இஸ்மாயில், மாவட்ட தலைவர் எம்.பி. நவாஸ்,எம்.எஸ். எஃப். மாவட்ட செயலாளர் பைஜ், கல்பட்டா தொகுதி தலைவர் பி. ஹம்சா, நகராட்சி தலைவர் முஸ்தபா, ஒயிட் கார்ட் தலைவர் சமது, தமிழ்நாடு எஸ். டி.யூ. பொருளாளர் அப்துல் மஜீது, கேரள மாநில பொதுக் குழு உறுப்பினர் வைக்கம் செய்யது முஹம்மது, ஊட்டி நகர தலைவர் முஹம்மது, செயலாளர் அன்வர் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
 
நிகழ்வுகளை விவரிக்க முடியாத நிலையில் அம்மக்களின் முகங்களில் சோகம் நிறைந்து காணப்படுகிறது. அம்மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்! நம்மாலான உதவிகளை செய்வோம்!
 
- KAM முஹம்மது அபூபக்கர் ExMLA
மாநில பொதுச் செயலாளர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்