முக்கிய செய்தி

கேரளா வயநாடு பேரிடர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு IUMLமுக்கிய தலைவர்கள் நிதிகான காசோலை வழங்கினர்

கேரளா வயநாடு பேரிடர் நிவாரண நிதிக்கு தமிழ்நாடு IUMLமுக்கிய தலைவர்கள் நிதிகான காசோலை வழங்கினர்
கேரளா வயநாடு பேரிடர் நிவாரண நிதிக்கு இ.யூ. முஸ்லிம் லீக் வர்த்தகரணி மாநில துணைத் தலைவர் சேப்பாக்கம் ஆலம்கான் இ.யூ. முஸ்லிம் லீக் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் நத்தம் வி.எம். ஜஹாங்கீர், மாவட்ட துணைச் செயலாளர் சேப்பாக்கம் ஜலால் ஆகியோர் ரூ.24 ஆயிரத்திற்கான காசோலையை தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீனிடம் வழங்கினர். இந்நிகழ்வின்போது மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ. ஷாஜஹான், மாநில முதன்மை துணைத் தலைவரும் தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கி ஆகியோர் உடனிருந்தனர்.