முக்கிய செய்தி

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் சந்திப்பு.......

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒதுக்கீடு செய்தமைக்காகவும், நமது வேட்பாளர் நவாஸ்கனி அவர்களின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்ததோடு, 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி கட்சியினரை அரவணைத்து, வெற்றிக்கு மிகச் சிறப்பாக வியூகம் அமைத்து அயராது உழைத்த முதலமைச்சர் தளபதியார் அவர்களை இன்று (25-04-2024) காலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களுடன் மாநில பொதுச் செயலாளர் முகம்மது அபுபக்கர், மாநில முதன்மை துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான், இராமநாதபுரம் வெற்றி வேட்பாளர் நவாஸ்கனி, மாநில செயலாளர் ஆடுதுறை ஷாஜஹான், மாணவரணி மாநில செயலாளர் ஷபீக் அகமது, ஊடகவியலாளர் ஷாஹுல் ஹமீது, முகம்மது ரபீக் உள்ளிட்டோர் முதலமைச்சரை சந்தித்தனர்.