முக்கிய செய்தி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கின் பவள விழா மாநாட்டில் சென்னை மண்டல இளைஞரணி சார்பாக சுமார் 1500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சீறுடையுடன் பங்கேற்க முடிவு.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கின் பவள விழா மாநாட்டில் சென்னை மண்டல இளைஞரணி சார்பாக சுமார் 1500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சீறுடையுடன் பங்கேற்க முடிவு.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கின் பவள விழா மாநாட்டில் சென்னை மண்டல இளைஞரணி சார்பாக சுமார் 1500 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சீறுடையுடன் பங்கேற்க முடிவு.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணியான #முஸ்லிம்_யூத்_லீக் 'கின் சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் 13/01/23 மாலை மக்ரிபுக்கு தொழுகைக்குப் பின் சென்னை எழும்பூர் பார்ம் ஷோர் ஹோட்டலில் முஸ்லிம் யூத் லீக் மாநில பொதுச் செயலாளர் எஸ்.அன்சாரி மதார் தலைமையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் முன்னிலையில் நடைபெற்றது,நிகழ்ச்சியை சென்னை கிழக்கு மாவட்ட யூத் லீக் தலைவர் A.ஜாகிர் ஹுசேன் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார்.
சென்னை மண்டலத்தின் சென்னை கிழக்கு, சென்னை வடக்கு, சென்னை தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, செங்கல்பட்டு தெற்கு செங்கல்பட்டு வடக்கு, ஆகிய மாவட்டத்திலிருந்து நிர்வாகிகள் கலந்து சிறப்பித்தார்கள்..
இக்கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டு கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
01. மாவட்டம் தோறும் அதிகபட்ச உறுப்பினர்களை சேர்க்க,உறுப்பினர் படிவம் வழங்கப்பட்டு அனைத்து பகுதிகளிலும் நிர்வாகிகளை நியமித்து அந்தந்த மாவட்டத்தில் பொதுக்குழு நடத்தி புதிய மாவட்ட நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
02. மாதம் ஒரு முறை கடைசி வாரம் சனி அல்லது ஞாயிறுகிழமைகளில் மாதாந்திர ஆலோசனை கூட்டம் நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
03. இளைஞர் அணி அமைப்பை வலுப்படுத்தும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் மாதம் ஒரு சமூக சேவை நிகழ்ச்சியான இலவச மருத்துவ,கண் சிகிச்சை,இரத்ததான முகாம், மற்றும் இலவச கத்னா முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.
04. இளைஞர்கள் போதைப்பொருள், சூதாட்டம் போன்ற பாவச் செயல்களில் ஈடுபடாமல் தடுத்து இளைஞர்கள் ஆர்வம் காட்டும் விதத்தில் கிரிக்கெட்,கபடி சிலம்பாட்டம் போன்ற விளையாட்டு போட்டிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்துவதென்று முடிவெடுக்கப்பட்டது..
05. சென்னை மண்டல முஸ்லிம் யூத் லீக்கின் புதிய அலுவலகம் சென்னை மையப் பகுதியில் திறப்பதென்று தீர்மானிக்கப்பட்டது..
06. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கின் பவள விழா மாநாட்டிற்கு சென்னை மண்டல இளைஞரணி சார்பாக சுமார் 1500 க்கும் மேற்பட்ட இளைஞர்களை திரட்டி சீறுடையுடன் பங்கேற்பதென இக்கூட்டம் உறுதியளிக்கிறது.
07. பவள விழா மாநாட்டை மக்களிடத்தில் எடுத்துச் செல்ல அதிக இடங்களில் சுவர் விளம்பரம், ஆட்டோ விளம்பரம், சென்னை சுற்றியுள்ள அனைத்து மஸ்ஜித்களின் வாசலில் பேனர் விளம்பரம் செய்வதென்று தீர்மானிக்கப்பட்டது..
08. பவள விழா மாநாட்டிற்காக சென்னையிலுள்ள அனைத்து மாவட்டங்களின் மையப் பகுதிகளில் மாநில நிர்வாகிகளை அழைத்து தெருமுனை கூட்டம் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது..
09. இக்கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகளாக அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர், அதில் வடசென்னை துணை அமைப்பாளராக முஹம்மது சமீர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளராக N.ஜியாவுதீன் துணை அமைப்பாளராக முஹம்மது ஆஷிக் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அமைப்பாளராக K.காஜா ஷெரீப் துணை அமைப்பாளர்களாக பெரோஸ் கான் மற்றும் ஷாஜிமோன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
மேலும் இக்கூட்டத்தில் சென்னை கிழக்கு மாவட்டம் தலைவர் A ஜாகிர் உசேன் செயலாளர் பாடி P. ரசூல்தின் பொருளாளர் B.அப்துல் வஹாப், நிர்வாகிகள் முனீர்,பிஸ்மில்லா ஷெரீஃப்,அப்துல் சமது சென்னை வடக்கு மாவட்ட தலைவர் முஹம்மது சுலைமான் பொருளாளர் அப்துல் ஜப்பார் நிர்வாகிகள் முஹம்மது சமீர், அமீன் ஷெரீப், முஹம்மது யூனஸ் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது ரியாஸ் செயலாளர் முஹம்மது இப்ராஹிம் பொருளாளர் முஹம்மது ஆஷிக், செங்கல்பட்டு மாவட்ட அமைப்பாளர் குலாம் தஸ்தகீர், முஹம்மது சல்மான், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஜியாவுதீன் துணை அமைப்பாளர் முஹம்மது ஆஷிக், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அமைப்பாளர் K.காஜா ஷெரீப் துணை அமைப்பாளர்கள் பெரோஸ் கான்,ஷாஜிமோன் நிர்வாகிகள் ஜாகிர் உசேன், சபரி, பாண்டியராஜன் மற்றும் பிரதீப் கலந்து கொண்டனர். இறுதியாக கூட்டத்தை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் N.ஜியாவுதீன் துஆ ஓதி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.