முக்கிய செய்தி

நாடாளுமன்றத்தில் நவாஸ்கனி எம்.பி

நாடாளுமன்றத்தில் நவாஸ்கனி எம்.பி
நாடாளுமன்றத்தில் நவாஸ்கனி எம்.பி
---
நிதிநிலை அறிக்கையில் கூடுதல் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில்.,
நாடாளுமன்ற உறுப்பினருக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தி வழங்க வேண்டும்.,
ஆழ்கடல் மீன்பிடி படகிற்கான மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.,
சிறுபான்மையினருக்கான pre metric scholarship பழைய முறைப்படி ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.,
அப்துல் கலாம் ஆசாத் எஜுகேஷன் பவுண்டேஷன் கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்க வேண்டும்.,
பிரதம மந்திரி பேரிடர் நிவாரண நிதியில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வண்ணம் நிதியினை உயர்த்தி வழங்க வேண்டும்.,
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவருமான கே. நவாஸ்கனி எம்பி நாடாளுமன்ற மக்களவையில் உரையாற்றினார்.
----
இதுகுறித்து அவர் ஆற்றிய உரை.,
மாண்புமிகு அவைத்தலைவர் அவர்களே,
நிதிநிலை அறிக்கையின் கூடுதல் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்ற வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு  நிதி ஆண்டுக்கு 5 கோடி வழங்கப்பட்டு வருகிறது.
இப்போது இருக்கக்கூடிய விலைவாசி உயர்வு வேலை ஆட்களின் ஊதியம் உள்ளிட்ட திட்ட மதிப்பீடுகள் எல்லாம் அதிகரித்திருக்கும் சூழலில், 5 கோடி ரூபாய் நிதியினை உயர்த்தி வழங்க வேண்டும்.
 தமிழ்நாட்டில் சட்டமன்ற தொகுதிகளுக்கே தொகுதி மேம்பாட்டு நிதியாக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூபாய்  3 கோடி ஒதுக்கப் படுகிறது.
 அப்படியிருக்கும்போது 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 5 கோடி நிதி போதுமானதாக இல்லை.
மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை எங்களால் முழுமையாக பூர்த்தி செய்ய இயலவில்லை.
எனவே அந்த நிதியை அதிகரித்து தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
 என்னுடைய நாடாளுமன்றத் தொகுதி பெரும்பான்மையாக மீனவர் மக்கள் அதிகம் வாழக்கூடிய தொகுதி.
 எங்கள் பகுதி மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினால் கைது செய்யப்படுவதும் அவர்களின் படகுகள் விடுவிக்கப்படாமல் சிறைபிடிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
அதற்கு தீர்வாக அரசு
ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை ஊக்குவிப்பதை வலியுறுத்துகிறது.
ஆழ்கடல் மீன்பிடி படகிற்கு மத்திய மாநில அரசுகளின் பங்களிப்போடு 80 சதவீதம் மானியமாகவும் 10% வங்கிக் கடனாக வழங்கப்படுகிறது. 
ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்குவதற்கு மீனவர்கள் முன் வருவதில்லை காரணம் படகிற்கு மட்டும் இந்த மானியம் பொருந்துகிறது வலை உள்ளிட்ட மற்ற மீன் பிடி உபகரணங்கள் வாங்குவதற்கு 40 முதல் 50 லட்சம் ரூபாய் வரை அவசியமாகிறது.
அந்த தொகைக்கும் சேர்த்து 80 சதவீத மானியமும் 10 சதவீத வங்கி கடனும் அளித்தால் மீனவர்கள் அதிகமாக அந்த ஆள்கடல் மீன்பிடி படங்களை வாங்குவதற்கு முன் வருவார்கள்.
 சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மௌலானா ஆசாத் எஜுகேஷனல் பவுண்டேசன் மூலமாக வழங்கப்படும் உதவி தொகை முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. 
 ஒன்றிய சிறுபான்மை நலத்துறை சார்பாக ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த Pre Matric Scholarship கல்வி உதவித்தொகை எட்டாம் வகுப்பு வரை தற்போது நிறுத்தப்பட்டிருக்கிறது.
 2009 -ன் படி  நடுநிலை கல்வி வரை இலவச கட்டாய கல்வி வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி இந்த கல்வி உதவித் தொகை நிறுத்தப்பட்டிருக்கிறது.
இந்த நிதியினை சிறுபான்மை நலத்துறை பரிசீலனை செய்து மீண்டும் சிறுபான்மை மாணவர்களுக்கு ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலக்கூடிய மாணவர்களுக்கு மீண்டும் வழங்க வேண்டும்.
சிறுபான்மை மாணவர்கள் மற்ற மாணவர்களோடு சம வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் சமூகநீதி அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்குவது அரசனுடைய கடமை.
 சிறுபான்மை மாணவர்கள் கல்வி பொருளாதார வேலைவாய்ப்பில் பின்தங்கி உள்ளார்கள் என்பதினை நீதியரசர் சச்சார் குழுவின் அறிக்கைகள் அரசிற்கு தெளிவுபடுத்தி உள்ளன.
சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியினை நிறுத்துவது மிகப்பெரிய அநிதியாகும் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
சிறுபான்மையினர் நலனுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நிதி ரூ.5029 கோடி ,  இந்த முறை வெறும் ரூ.4810 கோடி என குறைக்கப்பட்டிருக்கிறது.
 இதில் குறிப்பாக சிறுபான்மையினரின் கல்விக்கான உதவித்தொகை சுமார் ஆறு சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. 
மேலும் கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட நிதியையும் முழுமையாக செலவு செய்யப்படவும் இல்லை.
நிதி குறைக்கப்பட்டும் முழுமையாக செலவு செய்யப்படாமலும் இருப்பதால், சிறுபான்மை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
சிறுபான்மை மாணவர்களின் கல்வியை பறிக்கக் கூடிய வகையில் வஞ்சிக்கக்கூடிய வகையில் நிறுத்தப்பட்ட நிதியை உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும்.
PMNRF - எனப்படும் பிரதம மந்திரி தேசிய பேரிடர் நிவாரண நிதி முழுமையாக முறையாக மருத்துவமனைகளுக்கு விடுவிக்கப்படுவதில்லை.
நாங்கள் பரிந்துரைக்கக்கூடிய பரிந்துரைகள் மருத்துவமனைகளில் எடுத்துக் கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள்.
காரணம் நிதி நிலுவையில் இருப்பதை குறிப்பிடுகிறார்கள்.
பயனாளிகள் 8 லட்சம் முதல் 10 லட்சம் வரை விண்ணப்பித்தால் இரண்டு அல்லது மூன்று லட்சம் ரூபாய் மட்டுமே கொடுக்கப்படுகிறது.
ஏழை எளிய மக்களின் மருத்துவத்திற்காக கொடுக்கும் அந்த நிதியை உயர்த்தி கொடுக்க வேண்டும், உடனடியாக மருத்துவமனைகளுக்கு இருக்கும் நிலுவைத் தொகைகளையும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவருமான கே நவாஸ் கனி எம்பி ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார். https://fb.watch/hqBB_6p0-j/