முக்கிய செய்தி

​திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் டவுன் ஜும்ஆ பள்ளிவாசல் பிரச்சனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துசெல்வோம் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்.

​திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் டவுன் ஜும்ஆ பள்ளிவாசல் பிரச்சனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துசெல்வோம் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் டவுன் ஜும்ஆ பள்ளிவாசல் பிரச்சனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துசெல்வோம் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன்.
---
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவரும், முஸ்லிம் சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பழனி மெயின் ரோட்டில் ஏறக்குறைய சுமார் 65 வருட காலமாக தொழுகை நடைபெற்று வரும் ஒட்டன்சத்திரம் டவுன் ஜும் ஆ பள்ளிவாசல் முன்பு ரோடு விஸ்தரிப்பு காரணம் காட்டி பள்ளிவாசலை அப்புறப்படுத்த முயற்சிகள் நடைபெறுவதாக முஸ்லிம் லீக் தலைமைக்கு ஜமாஅத்தினர்கள் புகார் மனு அளித்தனர்.

அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த தேசிய தலைவர் பேராசிரியர் அவர்கள்  25.12.2022 ஞாயிறு மதியம் நேரில் கள ஆய்வு செய்ய ஒட்டன்சத்திரம் விஜயம் செய்தார்கள்.

ஒட்டன்சத்திரம் பள்ளிவாசல் சம்பந்தமான சரியான தகவல்கள், பள்ளிவாசலில் நெடுங்காலமாக தொழுகை நடைபெற்றுவருவதற்கான ஆவணங்களையும் ஜமா அத்தார்களிடமிருந்து நேரில் பெற்று,
அவர்கள் கூறிய கருத்துக்களை கவனமாக கேட்ட பின்பு, இந்த பிரச்சனை சம்பந்தமாக மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்கு எடுத்து சென்று கலந்து, துரிதமாக சுமூகமான முடிவு எடுப்பதாக ஜமாஅத்தார்களிடம் கூறிச் சென்றார்கள். 

சந்திப்பின்போது ஜமாஅத்தின் முத்தவல்லி, செயலாளர் சேக் அப்துல் காதர், மாணவர் அணி மாநில பொதுச் செயலாளர் திருச்சி ஏ.எம்.எச் அன்சர் அலி, ஒட்டன்சத்திரம் நகர முஸ்லிம் லீக் தலைவர் சஹாப்தீன், மற்றும் பலர் உடன் இருந்தனர்.