முக்கிய செய்தி

காயிதே மில்லத் என்றால் வழிகாட்டும் தலைவர் என்று பொருள்.

காயிதே மில்லத் என்றால் வழிகாட்டும் தலைவர் என்று பொருள்.
காயிதே மில்லத் என்றால் வழிகாட்டும் தலைவர் என்று பொருள். அரசியல், சமூகம், தமிழ்ப்பற்று, தமிழ்நாட்டு உரிமை ஆகிய அனைத்துக்கும் வழிகாட்டும் தலைவராக வாழ்ந்தவர் அவர்!

மக்களவை, மாநிலங்களவை, தமிழக சட்டமன்றம் என அனைத்திலும் உறுப்பினராக இருந்து மக்கள் தொண்டாற்றியவர்!

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகிய மூவருடனும் அன்பும் கொள்கையும் கலந்த நட்புடன் இருந்தவர். 1967 தேர்தலில் தி.மு.க. ஆட்சி அமைக்க பேரறிஞர் அண்ணா அவர்களுக்குத் தோள் கொடுத்த தோழர்!

இசுலாம் என் மதம், தமிழ் என் தாய்மொழி என்ற கொள்கைப்படி இறுதிவரை வாழ்ந்தவர்!

காயிதே மில்லத் அவர்கள் கட்டிக்காத்த மதநல்லிணக்கம் - சிறுபான்மையினர் நலன் - மொழிப்பற்று - இனப்பற்று கொண்டவர்களாக நாம் அனைவரும் செயல்படுவோம்!