முக்கிய செய்தி

இன்று நாடாளுமன்ற மக்களவையில் நிதிநிலை அறிக்கை 2024 -25 மீதான விவாதத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான நவாஸ்கனி எம்பி உரை.

இன்று நாடாளுமன்ற மக்களவையில் நிதிநிலை அறிக்கை 2024 -25 மீதான விவாதத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான நவாஸ்கனி எம்பி உரை.
https://www.facebook.com/share/v/cBfgt9eApNhoRKZw/?mibextid=oFDknk நாடாளுமன்றத்தில் நவாஸ்கனி எம்பி, Highlights தமிழ்நாடு என்ற மாநிலம் இந்தியாவில் இருப்பது ஒன்றிய அரசிற்கு தெரியுமா தெரியாதா என்ற சந்தேகத்தை இந்த நிதி நிலை அறிக்கை எழுப்புகிறது. கடை தேங்காயை எடுத்து வலியில் வந்த யானைக்கு உடைப்பது போல, பொதுமக்களின் வரிப்பணத்தை எடுத்து உங்களுடைய ஆட்சியை காப்பதற்காக ஆந்திர பிரதேசத்திற்கும் பீகாருக்கும் வாரி வாரி வழங்கி இருக்கிறீர்கள். தமிழையும் தமிழ்நாட்டையும் மறந்தும் கூட நம்முடைய நிதி அமைச்சர் உச்சரிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சிக்கு தனியாக அரசியல் இருக்கலாம் தனியாக கொள்கைகள் இருக்கலாம் தனியாக சித்தாந்தங்கள் இருக்கலாம், ஆனால் அதனை இந்திய அரசின் மீது திணிப்பது இந்தியாவினுடைய இறையாண்மைக்கு மிகப்பெரிய ஆபத்து. ‘சப்கே சாத் சப்கா விகாஸ்’என்ற உங்களுடைய கோஷம் வெறும் நடிப்பு என்பதை உங்களுடைய நடவடிக்கைகள் பிரதிபலிக்கிறது. நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டும். இன்று நாடாளுமன்ற மக்களவையில் நிதிநிலை அறிக்கை 2024 -25 மீதான விவாதத்தில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான நவாஸ்கனி எம்பி உரை. -- நவாஸ்கனி எம்பி இன்று நாடாளுமன்ற மக்களவையில் ஆற்றிய உரை -- நன்றி மாண்புமிகு அவை தலைவர் அவர்களே, 2024- 25 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உலகின் தலைசிறந்த ஜனநாயக நாடுகளில் ஒன்று நம் தாய் திருநாடு இந்தியா. கூட்டாட்சி தத்துவத்தின் மூலமாக முன்மாதிரியான மக்களாட்சியை உலகிற்கு எடுத்துரைக்கக் கூடிய நாடு நம் நாடு. பாரதிய ஜனதா அரசினுடைய நிதிநிலை அறிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான ஜனநாயகத்திற்கு எதிரான பின்பத்தை பிரதிபலிப்பதை வருத்தத்தோடு பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த பத்து ஆண்டுகளிலே தாக்கல் செய்யப்பட்ட மிக மோசமான நிதிநிலை அறிக்கை இந்த நிதிநிலை அறிக்கை. தமிழ்நாடு என்ற மாநிலம் இந்தியாவில் இருப்பது ஒன்றிய அரசிற்கு தெரியுமா தெரியாதா என்ற சந்தேகத்தை இந்த நிதி நிலை அறிக்கை எழுப்புகிறது. தங்களுடைய ஆட்சியை காப்பாற்றுவதற்கு இந்த நாட்டினுடைய கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக கூட்டாட்சி தத்துவத்தை காக்க தவறி இருக்கிறது இந்த அரசு. மாநிலங்களுக்கிடையே வேறுபாடு பார்ப்பது ஏற்றத்தாழ்வு பார்ப்பது என்பது கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்றக்கூடிய ஒரு நாட்டிற்கு அழகல்ல. உங்களுக்கு வாய்ப்பு அளிக்காத மாநிலங்களின் மீதான கோபத்தை வெளிப்படுத்தக்கூடிய பட்ஜெடாகவே இந்த பட்ஜெட் இருக்கிறது. உங்களுடைய அரியணையை காப்பதற்கு யாருடைய தயவு தேவையோ அந்த கட்சி ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களுக்கு நீங்கள் சிறப்பு நிதியை அள்ளிக் கொடுத்து இருக்கிறீர்கள். கடை தேங்காயை எடுத்து வலியில் வந்த யானைக்கு உடைப்பது போல, பொதுமக்களின் வரிப்பணத்தை எடுத்து உங்களுடைய ஆட்சியை காப்பதற்காக ஆந்திர பிரதேசத்திற்கும் பீகாருக்கும் வாரி வாரி வழங்கி இருக்கிறீர்கள். எப்போதும் ஒப்புக்கு சொல்லப்படும் திருக்குறளும் இந்த முறை இடம் பெறவில்லை. தமிழையும் தமிழ்நாட்டையும் மறந்தும் கூட நம்முடைய நிதி அமைச்சர் உச்சரிக்கவில்லை. பாரதிய ஜனதா கட்சிக்கு தனியாக அரசியல் இருக்கலாம் தனியாக கொள்கைகள் இருக்கலாம் தனியாக சித்தாந்தங்கள் இருக்கலாம், ஆனால் அதனை இந்திய அரசின் மீது திணிப்பது இந்தியாவினுடைய இறையாண்மைக்கு மிகப்பெரிய ஆபத்து. எங்களிடமிருந்து பெற்ற வரிப்பணத்தில் இருந்து எங்களுக்கு உரிய பங்கை தராமல் மற்ற மாநிலங்களுக்கு வாரி இறைப்பது நியாயமா என்று தான் கேட்கின்றோம். எங்களுடைய மாநிலத்திற்கு ஏராளமான தேவைகள் இருக்கின்றது, இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்பட்ட பேரிடர்களுக்கு கேட்ட நிவாரண நிதியை இன்னும் வழங்கவில்லை, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்களுக்கான நிதியை இன்னும் வழங்கவில்லை, எங்களுடைய மாநிலத்திற்கு என்னென்னவெல்லாம் தேவை என்பதை எங்களுடைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாகவே பட்டியலிட்டு காண்பித்த பின்பும் தமிழ்நாட்டிற்கு என்று சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை, சிறப்பு நிதிகளும் கொடுக்கப்படவில்லை, ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய திட்டங்களுக்கும் நிதி அளிக்காதது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி. வேலைவாய்ப்பை பொருத்தவரை, ஏற்கனவே இந்த அரசு அறிவித்த வேலைவாய்ப்புகளே கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றாத நிலையில், மிகவும் குழப்பம் விளைவிக்கக்கூடிய வகையில் இப்போது வேலைவாய்ப்பு திட்டத்தை அறிவித்திருக்கிறது. அதில் ஒரு தெளிவில்லை. எந்த வகையில் வேலை வாய்ப்பை இளைஞர்களுக்கு அளிக்கப் போகிறீர்கள் என்பதில் தெளிவில்லை. வேலையில்லா திண்டாட்டம் நாட்டில் அதிகமாக இருக்கின்றது. வேலை கொடுப்பவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுப்பதாகவும், ஊதியத்தை அந்த நிறுவனங்களின் சி எஸ் ஆர் நிதியிலிருந்து சரி செய்து கொள்ளலாம் என்றும் கூறியிருப்பது மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே சி எஸ் ஆர் நிதியிலிருந்து நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்களையும் இது பாதிக்கும். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறிய அந்த திட்டத்தைக் கூட, முறையாக காப்பி அடிக்காமல் அதையும் நீங்கள் சரியாக செய்யவில்லை. என்னுடைய நாடாளுமன்ற தொகுதி நீளமான கடற்பரப்பை கொண்ட தொகுதி, கடல் சார்ந்த தொழில்களையும், பனை சார்ந்த தொழில்களையும் தென்னை சார்ந்த தொழில்களையும் ஊக்குவிக்கும் வண்ணம் தொழில் நிறுவனங்களை ஏற்படுத்தி அங்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து கேட்டு வருகிறேன். இதுவரை அதற்கான எந்த திட்டத்தையும் இந்த அரசு அறிவிக்கவில்லை. 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்திட வேண்டும், ஊதியத்தை 400 ரூபாயாக அதிகப்படுத்திட வேண்டும், இது கிராமப்புற வாழ்வாதாரத்திற்கான ஒரு அருமையான திட்டம். கடந்த காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம். இதனை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என கேட்டு இருக்கின்றோம் . அது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இல்லை. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி என்பது ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பாராளுமன்ற தொகுதியில் 5 கோடி என்பது போதாத நிதியாக இருக்கின்றது. எங்களுடைய தமிழ்நாட்டில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ரூபாய் மூன்று கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இன்று விலைவாசிகள் எல்லாம் உயர்ந்து, திட்ட மதிப்பீடுகள் எல்லாம் பெருமளவில் உயர்ந்துவிட்ட நிலையில் பல்வேறு பணிகளை செய்ய முடியாத நிலை இருக்கின்றது. இந்த நிதியை 5 கோடியிலிருந்து 15 கோடியாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வழக்கம்போல சிறுபான்மை மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கை ஏமாற்றத்தையே தந்திருக்கிறது. 25 கோடி இஸ்லாமியர்கள் இருக்கக்கூடிய இந்த நாட்டில் இஸ்லாமியர்களுக்கு அமைச்சரவையில் இடமில்லை. ‘சப்கே சாத் சப்கா விகாஸ்’என்ற உங்களுடைய கோஷம் வெறும் நடிப்பு என்பதை உங்களுடைய நடவடிக்கைகள் பிரதிபலிக்கிறது. சர்வதேச அளவில் மத நல்லிணக்க ஜனநாயக நாடாக நம்முடைய நாடு பார்க்கப்படுகின்றது. பல முக்கியமான சட்டங்களை உங்களுக்கு முன்பிருந்த அரசு உருவாக்கியிருக்கிறது. அதில் ஒரு முக்கியமான சட்டம் 1991 வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்பு சட்டம். ஒரு மதத்தின் வழிபாட்டு தளங்களை மற்றொரு மதத்தினர் உரிமை கோர முடியாது என்கின்ற சட்டம் இருக்கின்ற போதும், அயோத்தி தீர்ப்புக்கு பிறகும், அயோத்தியினுடைய தீர்ப்பை ஏற்று இந்த நாட்டில் இருக்கக்கூடிய 25 கோடி இஸ்லாமியர்களும் அமைதியை நிலைநாட்ட முன் வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த அரசு அமைதியை விரும்பாத அரசாக இருக்க கூடியதினால் மீண்டும் மீண்டும் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்கள் இருக்கக்கூடிய இடங்களில், மசூதிகளுக்குள் கோவில்கள் இருக்கின்றது என்று கூறி இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலங்களில் இந்துக்களின் வழிபாட்டு முறைகளை தேடக்கூடிய ஒரு நிலையை இந்த அரசு நிறுத்த வேண்டும். ஆன்மீக அரசியல் என்ற பெயரில் மதத்தை வைத்து நீங்கள் செய்யக்கூடிய அரசியலுக்கு உங்களுக்கு அயோத்தியில், உத்திரபிரதேசத்தில் மக்கள் முடிவு கட்டி இருக்கிறார்கள். அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத்தில் மக்கள் உங்களுக்கு முடிவு கட்டியிருக்கிறார்கள். எனவே மதத்தை வைத்து அரசியல் செய்யாமல் அரசியல் சாசன சட்டத்தை மதித்து ஜனநாயக மாண்புகளை மதித்து நீங்கள் ஆட்சி நடத்த வேண்டும். எங்களுடைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் வாக்களித்தவர்களுக்கும் வாக்களிக்காதவர்களுக்குமான அரசு தமிழ்நாடு அரசு என கூறி ஒரு சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். அவரைப் பின்பற்றி இந்த அரசு நடக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்திற்கு நீங்கள் கொடுக்கக்கூடிய நிதியை எங்களுக்கு வேண்டிய நிதியை உரிமையோடு கேட்கின்றோம். ஏனென்றால் மற்ற மாநிலங்களை விட, நீங்கள் அதிகமாக சிறப்பு நிதியை ஒதுக்கி இருக்கும் மாநிலங்களை விட அதிகமான ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளை வழங்கக்கூடிய மாநிலம் என்ற உரிமையோடு கேட்கின்றோம், எங்களுக்கான நிதியை தாருங்கள். மருத்துவ துறையில் இந்த நாட்டில் அதிகமான மருத்துவர்கள் உருவாக்கி இந்த நாட்டில் அதிகமான மருத்துவ சேவையை செய்து கொண்டிருக்கக் கூடிய ஒரு மாநிலம் தமிழ்நாடு. அதனை பொறுத்துக் கொள்ள முடியாத இந்த அரசு நீட் என்ற தடை தேர்வை உருவாக்கி, அதன் மூலம் திறமையான மாணவர்களுடைய எதிர்காலத்தை பாழாக்கிக் கொண்டிருக்கிறது. அந்த நீட்டிற்கு தடை விதிக்க வேண்டும். எங்களுக்கு விலக்கு வேண்டும் என்று சொல்லி ஒட்டுமொத்த தமிழகத்தின் சட்டசபையில் பாரதிய ஜனதாவை தவிர எதிர்க்கட்சி, ஆளுங்கட்சி என்று அனைத்து உறுப்பினர்களும் இணைந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினார்கள், அதற்கு ஒப்புதல் கொடுக்காமல் இந்த அரசு அதனை பரிசீலிக்காமல், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்காமல் இருக்கிறது. உடனடியாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.