முக்கிய செய்தி

மார்ச் 10 நடைபெற உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75வது ஆண்டு பவள விழா மாநாடு சம்பந்தமாக இராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பிரைமரி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் வருசை முஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மார்ச் 10 நடைபெற உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75வது ஆண்டு பவள விழா மாநாடு சம்பந்தமாக இராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பிரைமரி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் வருசை முஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மார்ச் 10 சென்னை YMCA மைதானத்தில் நடைபெற உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75வது ஆண்டு பவள விழா மாநாடு சம்பந்தமாக இராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பிரைமரி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் (15-01-2023) ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணியளவில்  இராமநாதபுரம்  சின்னக்கடை பாசிப் பட்டறை பல்வகை  பயன்பாட்டு கூடத்தில் மாவட்ட தலைவர் வருசை முஹம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 
மாவட்ட செயலாளர் முஹம்மது பைசல் முன்னிலை வகித்தார்.

நகர் உலமாக்கள் அணி அமைப்பாளர் அன்வர் ஆலிம் கிராஅத் ஓதினார்.

மாவட்ட துணைத் தலைவர் சாதுல்லாஹ்கான்  வரவேற்புரையாற்றினார்.

மாவட்ட உதவிச் செயலாளர்கள் முகம்மது யாக்கூப்,ஆசிக் உசேன், இராமநாதபுரம் நகர் செயலாளர் சிராஜூதீன் ,கீழக்கரை நகர் துணை செயலாளர் முஹம்மது ஹஸன், நத்தம் பிரைமரி செயலாளர் சீனி முஹம்மது, பெரியப்பட்டிணம் மற்றும் பாரதிநகர் பிரைமரி நிர்வாகிகள் ஆகியோர் பவள விழா மாநாடு சம்பந்தமாக கருத்துரை வழங்கினர்.

மாநில பொருளாளரும், மாநாட்டிற்கான  மேலிட பொறுப்பாளருமான MSA ஷாஜஹான் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கதியத்துல்லாஹ், STU மாவட்ட அமைப்பாளர் செய்யது இபுறாஹிம், துணை அமைப்பாளர் பைரோஸ்கான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் சுல்தான் சலாவுதீன், துணை ஒருங்கிணைப்பாளர் சாபிர்கான் , இராமநாதபுரம் நகர் தலைவர் முகம்மது காசிம், நகர் மாணவரனி நூருல் சபிக்,கீழக்கரை நகர் செயலாளர் ஹபீப் முஹம்மது தம்பி, நகர் பொருளாளர் குதுபுதீன் ராஜா, நகர் துணைத்தலைவர் சபிக், நகர் இளைஞரணி தலைவர் தர்பா கல்வத்தி ,நகர் நிர்வாகிகள் லெப்பை தம்பி,செல்ல வாப்பா, ஹாஜா ஏர்வாடி நகர் செயலாளர் அஜ்மீர்கான், நகர் துணை தலைவர் பாதுஷா, நகர் கெளரவ ஆலோசகர் முகம்மது பாதுஷா ,நகர் இளைஞரணி மீலா, வார்டு நிர்வாகி பாடகர் அபுதாஹிர், தகவல் தொழில்நுட்ப அணி நாசிர் முக்தார் உள்ளிட்டோர கலந்து கொண்டனர்.

மாவட்ட துணை செயலாளர் முகம்மது யாக்கூப் நன்றியுரையாற்றினார்.

ஏர்வாடி நகர் தலைவர் நவ்பாதுஷா ஆலிம் துஆவுடன் இனிதே நிறைவுற்றது.