முக்கிய செய்தி

யுனிசெப் அமைப்பு அண்ணா பல்கலைகழகம் ஒருங்கிணைப்புடன் மாபெரும் குழந்தைகள் உரிமை தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் அண்ணன் எஸ்.சல்மான் முகமது அவர்கள்

யுனிசெப் அமைப்பு அண்ணா பல்கலைகழகம் ஒருங்கிணைப்புடன் மாபெரும் குழந்தைகள் உரிமை தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் அண்ணன் எஸ்.சல்மான் முகமது அவர்கள்
யூனிசெப் அமைப்பு அண்ணா பல்கலைக்கழக ஒருங்கிணைப்புடன் குழந்தைகள் உரிமைகள் குறித்த மாபெரும் கருத்தரங்கம் சென்னை கிண்டி ரமடா ஹோட்டல் அரங்கத்தில் 12/8/2024 திங்கட்கிழமை நடைபெற்றது. அனைத்து கட்சி தலைவர்களும், சமூக அமைப்புகளும் கலந்து கொண்ட இந் நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமை தாங்கினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக, தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் எஸ். சல்மான் முஹம்மது கலந்து கொண்டு பேசுகையில் குழந்தைகள் உரிமையை மேலும் வலுப்படுத்த கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மாநிலம் தோறும் நிறுவப்படுதல், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உரிமைகளை தெளிவாக நிர்ணயம் செய்தல், அக்குழந்தைகளுக்கு வீடு தேடி கல்வி கற்பித்தல், சமீபத்தில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய ராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன குழந்தைகளின் வாழ்வுரிமைக்காக யூனிசெஃப் அமைப்பு குரல் கொடுக்க வேண்டும் என்றார்.