முக்கிய செய்தி

படுத்த படுக்கையாக தவித்த வெளிநாட்டு வாழ் தமிழர்.. தாயகம் திரும்ப துபாய் ஈமான் அமைப்புடன் இணைந்து களமிறங்கிய நவாஸ்கனி.எம்பி..

படுத்த படுக்கையாக தவித்த வெளிநாட்டு வாழ் தமிழர்.. தாயகம் திரும்ப துபாய் ஈமான் அமைப்புடன் இணைந்து களமிறங்கிய நவாஸ்கனி.எம்பி..
படுத்த படுக்கையாக தவித்த வெளிநாட்டு வாழ் தமிழர்.. தாயகம் திரும்ப துபாய் ஈமான் அமைப்புடன் இணைந்து களமிறங்கிய நவாஸ்கனி.எம்பி.. துபாய், செப்.12- துபாயில் கடந்த ஆகஸ்ட் 20ல் மன்னை அமீன் என்பவர் ஈமான் அமைப்பின் வெல்பேர் ஒருங்கினைப்பாளர் ராசிக்கிடம் தொடர்பு கொண்டு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த யஹ்யா ஹிதாயதுல்லா அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார், அவருக்கு மேல் சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார் அதன் அடிப்படையில்ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசின் அவர்களிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனே ஹமீது யாசின் அவர்கள் அவருக்கு தேவையான வழிகாட்டுதல்களை தந்ததோடு தமிழ்நாட்டில் இருக்கும் நவாஸ் கனி எம்பி அவர்களிடம் தொடர்புகொண்டுதேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டு கொண்டார் இதனையடுத்து எம்பி அவர்கள் தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை செயலாளரை தொடர்பு கொண்டு தெரிவித்ததோடு அவரின் ஏற்பாட்டில் ஈமான் அமைப்பின் ஒத்துழைப்போடு சென்னையை சேர்ந்த தனியார் வங்கி மேலாளர் ஜின்னா அவர்கள் வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் மேம்பாட்டு அதிகாரிகளை தொடர்புகொண்டு உடனடியாக அரசாணையை துபாய் இந்திய துணை தூதரகத்திற்கு மின்னஞ் சல் வாயிலாக அனுப்பி வைத்தார் மற்றும் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கு துறைரீதியான மருத்துவர்கள் தயார் நிலையில் இருப்பதற்காக சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் தேரணி ராஜன் அவர்களை தொடர்பு கொண்டு வேண்டுகோள் வைத்தார். இதனையடுத்து சென்னையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு துபாயிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு நேற்று அதிகாலை 4மணி அளவில் பத்திரமாகயஹ்யா திரும்பினார் உடனடியாக சென்னை விமான நிலையத்தில் இருந்து சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு அரசின் 108 ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தொடங்கியது உயிருக்கு போராடிய அவருக்கு துபாயில் தேவையான வழிகாட்டுதல் தந்த கவனித்த FF LO IT GIST அமைப்பின் பொதுச்செயலாளர் ஹமீது யாசீன், ராசிக்,மன்னை அமீன் சென்னை வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அதிகாரிகள் மற்றும் சென்னையில் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்த தனியார் வங்கி மேலாளர் ஜின்னா அவர்களுக்கும் அவர்களின் மனைவியும் மகளும் கண்ணீர் மல்கநன்றியினை தெரிவித்தனர்.