முக்கிய செய்தி

ஷார்ஜாவில் மரணமடைந்த தமிழக இளைஞரின் உடல் இந்திய துணை தூதரகத்தின் ஒத்துழைப்புடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் கே. நவாஸ்கனி எம்.பி. உதவியுடன் கார்கோ கிளியரன்ஸ் செய்யப்பட்டது.

ஷார்ஜாவில் மரணமடைந்த தமிழக இளைஞரின் உடல் இந்திய துணை தூதரகத்தின் ஒத்துழைப்புடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  சென்னை விமான நிலையத்தில் கே. நவாஸ்கனி எம்.பி. உதவியுடன் கார்கோ கிளியரன்ஸ் செய்யப்பட்டது.
ஷார்ஜாவுக்கு விசிட் விசாவில் வந்த வேலூர் நகரைச் சேர்ந்த சுகைல் அஹமத் வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 07.12.2022 அன்று மரணமடைந்தார்.
அவரது குடும்பத்தினரது வேண்டுகோளையடுத்து அவரது உடலை அல் அய்ன் நகரில் நல்லடக்கம் செய்ய அல் அய்ன் இந்திய சமூக மைய தலைவர் கீழக்கரை முபாரக் முஸ்தபா, சமூக ஆர்வலர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் முயற்சி மேற்கொண்டனர். எனினும் அதற்கான அனுமதி கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடல் ஏர் இந்தியா விமானத்தில் அவரது சகோதரர் ரஷீத் அஹமது உடன் சென்னை விமான நிலையத்துக்கு 21.12.2022 புதன்கிழமை கொண்டு வரப்பட்டது.
அவரது உடலை விமான நிலையத்தில் விரைவாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத்தலைவருமான கே.நவாஸ்கனி ஒத்துழைப்புடன் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியில் அப்துல் ரவூப், நூர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
இதனால் விமான நிலையத்தில் இருந்து விரைவாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த பணிக்கு தேவையான ஆதரவை வழங்கிய இந்திய துணை தூதரகம், ஏர் இந்தியா, கே. நவாஸ் கனி எம்பி. உள்ளிட்ட குழுவினருக்கு அவரது சகோதரர் நன்றி தெரிவித்தார்.