முக்கிய செய்தி

திருநெல்வேலி அருணா கார்டியாக் கேர், புளியங்குடி தியானா பல் பொது மருத்துவமனை சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் எஸ்.சையது சுலைமான் தலைமையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

திருநெல்வேலி அருணா கார்டியாக் கேர், புளியங்குடி தியானா பல் பொது மருத்துவமனை சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் எஸ்.சையது சுலைமான் தலைமையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி அருணா கார்டியாக் கேர், புளியங்குடி தியானா பல் - பொது மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் புளியங்குடி அகஸ்தியர் கோவில் தெருவில் எஸ்.எஸ். சுலைமான் காம்ப்ளக்ஸில் அமைந்துள்ள தியானா பல் - பொது மருத்துவ மனை வளாகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வர்த்தக அணியின் மாநிலத் தலைவர்எஸ். சையது சுலைமான் தலைமையில் புளியங்குடி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர். பால்ராஜ், துணைத் தலைவர் எஸ். ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. நகர காங்கிரஸ் பொதுச் செயலாளர் வி.முகமது ஜவஹர்லால் அனைவரையும் வரவேற்றார். உடல் பரிசோதனைக்காக முகாமிற்கு வந்திருந்தவர்களை அருணா கார்டியாக் கேர் இதய சிறப்பு மருத்துவர் ராமதாஸ், தியானா மருத்துவமனையின் பல் அறுவை சிகிச்சை மருத்துவர் அஜ்மல் மீரான், பொது நல மருத்துவர்ஜெனஃபர் மல்லி ஆகியோர் சிறப்பு கவனம் எடுத்து பரிசோதித்து ஆலோசனை வழங்கினர். தியானா பல் - பொது மருத்துவமனை நிறுவனர் வி.வாஞ்சி மைதீன் அபூபக்கர் நன்றி கூறினார்