முக்கிய செய்தி

இஸ்லாமானவர்களின் நியாயத்தை புரிந்து அவர்களை பி.சி. முஸ்லிம்களாக அரசாணை பிறப்பித்த திராவிட மாடல் நாயகன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி... இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை.

இஸ்லாமானவர்களின் நியாயத்தை புரிந்து அவர்களை பி.சி. முஸ்லிம்களாக அரசாணை பிறப்பித்த திராவிட மாடல் நாயகன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி...  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை.
இஸ்லாமானவர்களின் நியாயத்தை புரிந்து அவர்களை பி.சி. முஸ்லிம்களாக அரசாணை பிறப்பித்த திராவிட மாடல் நாயகன் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றி...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கை.
--
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :

திராவிட மாடல் நல்லாட்சி நடத்தும் தமிழக முதல்வர் தளபதி மு க ஸ்டாலின் அவர்களின் மதம் மாறியவர்கள் பற்றிய அறிவிப்பு அரசாணையாக வந்திருப்பது தமிழக சிறுபான்மை சமூகத்தவருக்கு பெரும் மன மகிழ்வை தருகிறது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் 75வது பவள விழா ஆண்டு நிறைவு பெறும் இந்த மார்ச் 10 ஆம் தினத்தில் திராவிட மாடல் அரசின் அரசாணை நாடும் ஏடும் நல்லோரும் போற்றும்படியான அறிவிப்பாக ஒளி சிந்தி வருகிறது. படிப்போர் அனைவருக்கும் பெரும் மகிழ்வையும் வரவேற்பையும் தந்து கொண்டிருக்கிறது. 
இந்திய அரசியல் அமைப்புச் சட்ட விதிகளின்படி இந்தியக் குடிமக்கள் யாரும், தான் உளமாற ஏற்கும் எந்த ஒரு மதத்திலும் தன்னை இணைத்துக் கொள்ளும் உரிமையை - அடிப்படை உரிமையாகப் பெற்று இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்! இதனை அரசியல் விதி ஒன்றில், தான் உளமாற ஏற்கும் எந்த ஒரு மதத்தையும் நம்பவும் அதன் ஒழுங்குமுறைகளை பின்பற்றி நடக்கவும், அதனை பிறர் மத்தியில் நளினமான முறையில் நவிலவும் உரிமை வழங்கப் பெற்றிருக்கிறது. 

இந்த உரிமையை பின்பற்றிய இந்து மதத்தில் உள்ளவர்கள் கிறிஸ்தவம், இஸ்லாம், புத்தநெறி, சமண மதம், சீக்கிய மதம் என்பனவற்றுக்கு மாறுவதும் இந்த மதங்களில் உள்ளவர்கள் இந்து மதத்திற்கு மாறுவதும் அரசியல் சட்ட விதிகளின்படி நடந்து வரும் வழக்கமே ஆகும். ஆனால் பாரதிய ஜனதா கட்சியினர் ஆட்சி நடத்தும் மாநிலங்களில் இந்த அரசியல் அமைப்பு விதிகளின்படி மக்கள் மத விவகாரங்களில் நடப்பதற்குப் பெரும் தடைகள் விதிக்கப்பட்டும். சிறைச் சாலைகளுக்குள் தள்ளப்படும் கொடுமைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்திய அரசியல் அமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டு மதவிவ காரங்களில் மக்கள் பின்பற்றும் நடைமுறைகளைத் தடுத்தும் தண்டித்தும் அராஜகங்களைப் புரிந்தும் அரசியல் சட்டத்தை காற்றில் பறக்க விடும் பாரதிய ஜனதாவின் போக்கை, மனிதாபிமான உள்ள அனைவரும் கண்டித்தும் எதிர்த்தும் நீதிமன்றங்களில் வாதாடியும் வருகின்றனர் என்பதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.

இத்தகைய பாரதிய ஜனதாவின் சட்ட விரோத நடவ டிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரிய ஒரு நடைமுறையை திராவிட மாடல் ஆட்சி நடக்கும் தமிழக அரசு இன்று அறிவித்து அரசியல் சட்ட மரபுகளை - அதன் மாண்புகளை அழகிய முறையில் பாதுகாத்து இருக்கிறது.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உள்ளுணர்வு கூறும் குரலுக்கு ஏற்ப நடப்பதற்குப் பெயர்தான் மனசாட்சிப்படி நடப்பது என்று கூறப்படுகிறது. தன் மனசாட்சிப்படி, தான் ஏற்கும் எந்த ஒரு மதநெறியையும் பின்பற்றி ஒழுகுவதற்கு எல்லாவிதமான உரிமைகளும் மனிதன் என்ற முறையில் அவனுக்கு இருக்கிறது. அதைத்தான் இந்திய அரசியல் சாசனமும் அடிப்படை உரிமை என்று சுட்டிக்காட்டி இயற்கை நெறியாக அறிவித்திருக்கிறது.

மதம்மாறிச் செல்லும் ஒருவர் அவர் இணையும் மதத்தில் சேரும்போது அந்த மதத்தின் உட்பிரிவுகளை மனதில் வைத்து யாரும் சேர்வதில்லை. 
இந்து மதத்தில் சேருகிறவர், தான் இந்து மதத்தில் சேர்வ தாகக் கருதித்தான் சேர்கிறார். 
கிறிஸ்துவ மதத்தில் சேருகிறவர், தான் கிறிஸ்தவ மதத்தில் சேர்வதாகத்தான் செல்கிறார். 
இஸ்லாம் மார்க்கத்தில் சேருகிறவர் இஸ்லாம் மார்க்கத்தில் சேருவதாக கருதிதான் சேர்கிறார். 
ஆனால், நாட்டில் நிலவும் சமூக ரீதியான அரசியல் தொடர்புடைய இடஒதுக்கீடு என்று வரும்போது இந்துவாக மாறியவர் எந்தப் பிரிவுக்கு உரியவர் என்பது பற்றிய வினா எழுகிறது.
இதைப்போலவே கிறிஸ்தவ மதத்தில் மாறும் ஒருவர் கிறிஸ்துவ மதத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டு பிரிவில் அவர் இடம் பெறுவாரா? என்ற வினா வந்துவிடுகின்றது. 
தமிழகத்தில் முஸ்லிம்கள் மத்தியில் இட ஒதுக்கீட்டுக்காக முஸ்லிம்களின் மத்தியில் உள்ள அன்சார் தக்கினி முஸ்லிம் தூதே குலா, லப்பை, ராவுத்தர் மற்றும் மரைக்காயர் தமிழ் அல்லது உருது பேசுவோர் உள்ளிட்டவர்கள் மாப்பிள்ளா, சேய்கு, செயது ஆகிய இந்த ஏழு பிரிவினர்கள் தனிமைப்படுத்தி வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில் இடஒதுக்கீட்டுக்கு மூன்று புள்ளி ஐந்து சதவிகிதம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது

 இந்த இடஒதுக்கீடு புதிதாக இஸ்லாம் மார்க்கத்திற்குள் வந்தவர்க்கு கிடைக்குமா? என்ற கேள்வி நீண்ட நாளாக அனைவரையும் அலைக்கழித்து வந்தது. 
புதிதாக இஸ்லாம் மார்க் கத்தை ஏற்பவர்கள் தமிழகத்தில் வாழும் 60 லட்சம் முஸ்லிம் சமூகத்தில் ஒருவராகத்தான் தன்னை இணைத்துக் கொள்கிறார். புதிதாக மதம் மாறி வந்தவரையும் முஸ்லிம் சமுதாயம் தனது அங்கமாக்கிக் கொண்டிருக்கிறது.புதிதாக வந்தவரை முஸ்லிம் சமுதாயத் தில் உள்ள எந்தப் பிரிவுக்கும் புதியவராக யாரும் கருதுவதும் இல்லை. அப்படி நினைப்பதும் இல்லை. 
ஆனால் கல்வி, வேலை வாய்ப்பு என்று வரும்போது புதிதாக மதம் மாறி வந்த முஸ்லிம்களுக்கு எப்படி இடஒதுக்கீடு கிடைக்கச் செய் வது? இந்த வினா பன்னெடுங் காலமாக தமிழகத்தில் பல்வேறு அரங்குகளில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்துள்ளது. இதற்குரிய நிரந்தர தீர்வாகத்தான் திராவிட மாடல் அரசின் மார்ச் 9 ஆம் நாள் தேதியிட்ட அரசாணை பிரகடனமாகி இருக்கிறது.  புதிதாக இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைந்தவர்கள் யாவருக்கும் இடஒதுக்கீடு பெறும் நோக்கில் இடஒதுக்கீடு தரப்படும். ஏழு பிரிவுகளில் எந்த ஒரு பிரிவையும் தனது பிரிவாக அறிவித்து அதற்குரிய சான்றிதழை அரசு அதிகாரியிடம் பெற்றுக் கொள்ளலாம் என்பதே புதிய அரசாணையின் சாரமாகும்.

இதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நீதிபதிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த சிறுபாண்மை ஆணையத்தின் தமிழகத் தலைவர் மாண்புமிகு பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சியினர், ஜமாஅத் உலமா சபை போன்ற அனைத்து தரப்பினரும் சமுதாயத்தின் ஒட்டுமொத்த பாராட்டுக்கும் உரியவர்கள் ஆவார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த விவகாரத்தில் நியாயத்தைப் புரிந்து அறிந்து எல்லோரும் ஏற்றும் போற்றும்படியான அரசாணையை பிரகடனப் படுத்தி இருக்கும் திராவிட மாடல் நல்லாட்சிக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்போம்! அரசின் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் எல்லோ ருக்கும் எல்லாமும் என்னும் உள்ளமாக நல்லாட்சியின் அடையாளமாக இந்த அரசாணை வந்திருக்கிறது; பொங்கி பூரிக்கும் மகிழ்ச்சியை யும் வரவேற்பையும் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தந்திருக் கிறது. இன்று போல் என்றும் வளமோடும் நலமோடும் வாழ்க என்று வாழ்த்துவோம்.
இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.